Home 12 ராசி மேஷராசிக்கு அதிசார குருப் பெயர்ச்சி பலன்

மேஷராசிக்கு அதிசார குருப் பெயர்ச்சி பலன்

by admin
ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அதிசார குருப் பெயர்ச்சி பலன்:

        மகரராசியில் இருந்த குரு  பகவான்

எதிர்வரும்  5.4.2021 அன்று   கும்ப ராசிக்கு  பெயர்ச்சியாகி  15.9.2021 வரை  கும்பராசியில்  இருந்து மீண்டும்  மகர ராசியில் பிரவேசிக்க உள்ளார்.

         கடந்த குருப்பெயர்ச்சியில் இருந்து மேஷராசியினருக்கு  ராசிக்கு 10 ஆம் இடத்தில் சனியுடன் இணைந்த குரு

     வீடு , மனை, வாகன வசதி,தாயார் ஆரோக்கியம்,தாயார் வழி உறவில் நன்மை  என்று சிலருக்கு மேன்மையான பலன்களையும்

     தொழில்,உத்தியோக  வகையில் சிக்கல்களையும்,போட்டி,பொறாமையினால் வம்பு, வழக்கு, கடன், பகை, சிலருக்கு நோய் பாதிப்பையும் வழங்கிய குரு பகவான்

              தற்போது லாபஸ்தானமான 11 ஆம்  இடத்திற்கு வந்து உங்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை அதிவிரைவாக  தந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த போகிறார்.

✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴

      🌹 குருபகவான் தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை பார்வை செய்வதால்

🌷உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியையும் அளித்து செய்யும் காரியங்களில் வெற்றியை வழங்க உள்ளார்.

🌷இளைய சகோதர,சகோதரி மூலம் நன்மையான பலனையும்,

🌷சிறு பயணங்களையும் ,சொத்து விற்பனைக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும்.

🌷திடீர் தொடர்புகளையும்,தெரிந்த நபர்களுக்காக மத்தியஸ்தம் செய்ய செல்ல கூடிய வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும்.

🌷வீடு மாற்றம் ஏற்படும்.குத்தகைக்கு வீடு,கடை எடுக்க ஏதுவான காலமாக இருக்கும்.

✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴

        🌹 குரு பகவான் தனது ஏழாம் பார்வையால் உங்கள்  உங்கள் ராசியின் 5ஆம் இடத்தை பார்க்க உள்ளதால்

🌷தாசபுத்தி நன்றாக இருப்பவர்களுக்கு உழைப்பு இல்லா திடீர் வருமானம் கிடைக்கும்.

(பங்கு சந்தை,லாட்டரி,பல்வேறு பந்தயங்கள்…)

🌷கடன்களை அடைக்க புதிய வருமானம் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும் காலமாக இருக்கும்

🌷குலதெய்வ வாழிபாடு,புண்ணிய யாத்திரை செய்யும் வாய்ப்புகளையும்,

🌷புதுமண தம்பதிகள் கர்ப்பம் தரிக்கும் காலமாகவும்

🌷நோய் பாதிப்பில் இருந்தவர்கள் நோயின் தாக்கம் குறையும் காலமாகவும்

🌷மந்திர உச்சாடனம் மூலம் மேன்மையும்

🌷வாலிப வயதில் உள்ளவர்களுக்கு காதல் எண்ணத்தை உருவாக்கும்

🌷உல்லாச கேளிக்கை

பயணத்தையும்,விருந்து கொண்டாட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴

 🌹 குரு பகவான் தனது 9ஆம் பார்வையால்

உங்கள் ராசியின் 7ஆம் இடத்தை பார்வையிடுவதால்

🌷திருமணம் ஆகாமல் நீண்ட நாளாக வருந்தும் 90Kids,80kids களுக்கு திடீர் திருமண யோகம் ஏற்படும்.

🌷தொழில் பங்குதாரிடம் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கும்.

🌷இழந்த பொருளை மீட்கும் காலமாக அமையும்(களவு போன நகை கிடைப்பது)

🌷கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிகழும்

🌷நண்பர்கள் மூலமும் வாழ்க்கை துணையின் உறவுகளின் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴

    மேலே குறிப்பிட்ட குருவின் அதிசார கோச்சார பலன் ஆனது உங்களுடைய சுய ஜாதகத்தில் நடப்பு தசா புத்தி நன்றாக இருந்தால் மிக உன்னதமான பலன்கள் அதிவேகமாக திடீர் என்று நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்து உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

You may also like

Leave a Comment

Translate »