Home ஆன்மீக செய்திகள் எதிர்ப்புகளை தூள் தூளாக்கும் வராஹி மந்திரங்கள்

எதிர்ப்புகளை தூள் தூளாக்கும் வராஹி மந்திரங்கள்

by admin
Varahi-Amman-Mantram_எதிர்ப்புகளை தூள் தூளாக்கும் வராஹி மந்திரங்கள்

பஞ்சமி தினம் வாராஹி தேவிக்கான, அவளை வழிபடுவதற்கான, அவளை ஆராதிப்பதற்கான அற்புதமான நாள். வாராஹி தேவிக்கு அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி!

வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.

வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம்
பாதுகாப்பாம். ஸ்வாஹா

எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும்

எனும் வாராஹி தேவியின் மந்திரத்தை தினமும் 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுத்தருளும். இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தவழச் செய்யும்.

சப்தமாதர்களில் ஒருவராகத் திகழும் வாராஹிதேவியை வணங்குவோம். மனோபலம் பெருகும். தடைகள் அகலும். இதுவரை தடைப்பட்டு வந்த விசேஷங்களும் மங்கல காரியங்களும் இனிதே நடைபெறும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வாள் வாராஹி அன்னை!

You may also like

Translate »