திருகருக்காவூர் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் முல்லைவனநாதர், அம்மை கர்ப்பகரட்சகி, கருகாத்தநாயகி என்று அழைப்படுகின்றனர். இத்தலமானது உசத் காலம் என்றழைக்கப்படும் (காலை 5.30 முதல் 6 மணி வரை) விடியற்காலை வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் முல்லை வனம் ஆகும்.
இத்தல இறைவன், விநாயகர், நந்தியெம்பெருமான் ஆகியோர் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தங்களாவர். ஊர்த்துவ முனிவரின் சாபத்தினால் பாதிக்கப்பட்ட நிருத்துவ முனிவரின் மனைவியான வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தைக் காத்து அருள்புரிந்தால் அன்னை கருகாத்தநாயகி என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இறைவனுக்கு அபிசேகம் கிடையாது, புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது தலமாகும்.