Home ஆன்மீக செய்திகள் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும்

by admin
Thirunallar-Temple-security-procedure-start-today_திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும்










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் இயங்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அணுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில், சனிக்கிழமை ்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிபெயர்ச்சி விழா என்கிறோம்.

விழா பாதுகாப்பு குறித்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதுச்சேரி கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன், நேற்று முன்தினம் மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

You may also like

Leave a Comment

Translate »