Home ஆன்மீக செய்திகள் மறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம்

மறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம்

by admin
Durga-Devi-pooja-at-home_விரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குல தெய்வத்தை மறந்தவர்களின் பரம்பரையில் வந்தவர்களுக்கு, அவர்களின் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய்விடும். இதனால், குலா தியேவா வழிபாடு தடைபடுவதால், பல்வேறு மனா உளைச்சலை சந்திக்க நேரிடும்.

எல்லா தெய்வங்களுக்கும் மேலானது குல தெய்வம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். அதாவது, நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வத்தையே குல தெய்வம் என்கிறோம்.

வீதியில் என்ன ஒரு விஷேசமாக இருந்தாலும். குலதெய்வத்தை முதலில் வழிபட்டு விட்டுத்தான் பின் அந்த காரியத்தை துவங்க வேண்டும். அப்படி செய்தால் தான், அந்த காரியம் சிறப்புடன் நிறைவடையும். இந்த நிலையில், சொந்த ஊர் அல்லது மாநிலம் விட்டு வேறு இடங்களில் குடி பெயர்ந்தோர், நாளைடைவில் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மறந்து விட வாய்ப்புள்ளது.

நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாற்றி, பூ சாற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்ட வேண்டும். – Advertisement – பின்பு “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.

இன்னொரு முறையும் இருக்கிறது. உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத் துணி சாற்றி, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற்சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றி உங்களுக்குத் தெரியவரும்.

இது தவிர மூத்த பிள்ளையின் ஜாதகத்தை வைத்து குலதெய்வம் ஆண் தெய்வமா அல்லது பெண் தெய்வமா, நிலத்தில் வாழும் தெய்வமா அல்லது மலையில் வாழும் தெய்வமா, உக்ர தெய்வமா அல்லது சாந்த தெய்வமா போன்ற விவரங்களை அறிய முடியும்.

You may also like

Leave a Comment

Translate »