சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன. சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன. சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும். செல்வந்தராக மாற்றவும் முடியும். ஈசனை எப்படி வழிபடுவது என்பதைப் பற்றிய பதிவு தான் இது.
கிரகணத்தின் போதும், பிரதோஷ தினங்களிலும் சிவாலய வழிபாடு நல்ல பலன்களை தரும்.
நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால், செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
சிவானந்தலஹரி என்னும் நூல் பார்வதி தேவியுடன் இருக்கும் சிவபெருமானை வழிபடுகிறவர்கள் பிறவிப்பயன் அடைவார்கள் என்கிறது.
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:
* சோமவார விரதம் – திங்கட்கிழமை தோறும்
* திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரை
* மகாசிவராத்திரி – மாசி தேய்பிறை சதுர்த்தசி
* உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமி
* கல்யாண விரதம் – பங்குனி உத்திரம்
* பாசுபத விரதம் – தைப்பூசம்
* அஷ்டமி விரதம் – வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
* கேதார விரதம் – தீபாவளி அமாவாசை.