Home ஆன்மீக செய்திகள் பல்லியை விரட்டினால் பணப் பிரச்சனை வருமா? மயிலிறகு வீட்டில் எப்படி வைத்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் தெரியுமா?

பல்லியை விரட்டினால் பணப் பிரச்சனை வருமா? மயிலிறகு வீட்டில் எப்படி வைத்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் தெரியுமா?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பல்லி வீட்டில் இருந்தால் நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா? இது பலரும் அறியாத தகவலாக இருந்து வருகிறது. பல்லிகள் இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல்லிகளின் நடமாட்டம் ஒவ்வொருவரின் வீட்டிலும் அதிகம் இருக்கும். வீட்டில் பல்லி இருந்தால் பணம் கொழிக்கும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் எல்லார் வீட்டிலும் தான் பல்லிகள் இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் பணம் கொழித்து கொண்டே இருக்கிறதா என்ன? பல்லிகளால் பிரச்சினை தான் உண்டு. அதுவும் அது சமையல் கட்டில் இருந்தால் நமக்கு அறுவருப்பாக இருக்கும். அதை விரட்டியடிக்க என்னவெல்லாமோ முயற்சி செய்து இருப்போம். ஆனால் ஒன்றும் பலன் தந்து இருக்காது. பல்லியை கொல்வதற்கும் நமக்கு மனம் வராது.

அதற்கு காரணம் பல்லியை இந்து மதத்தில் கடவுளாகவும் பார்க்கிறார்கள். அதற்கென்று கோயில்களில் தனி சந்நிதிகளும் உண்டு. பல்லியை கொன்றால் பாவம் என்று வேறு நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் அதை விரட்டுவதற்கு என்னதான் செய்வது? நீங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. உங்கள் வீட்டில் மயிலிறகு இருக்கிறதா? இல்லை என்றால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மயில் இறகு பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நீண்ட குச்சியுடன் கூடிய மயிலிறகாக வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மயில் இறகை வைத்து நம் வீட்டில் பல்லியை மட்டும் அல்ல, வேறு என்னவெல்லாம் ஆன்மீக ரீதியாக அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் மயிலிறகை பல்லி வரும் இடங்களில் ஒட்டி வைத்து விட்டால் போதும், அந்த இடத்தில் ஒரு பல்லி கூட வரவே வராது. மயிலிறகின் தோற்றம் பல்லியின் கண்களுக்கு வித்தியாசமாக தெரிவதால் அந்த இடத்திற்கு வரவே அது பயப்படும். அதுபோல் எங்கெல்லாம் பல்லிகள் வருகிறதோ? அங்கெல்லாம் ஒட்டி வைத்து விடுங்கள். முக்கியமாக வீட்டிலிருக்கும் டியூப் லைட் கீழே ஒட்டி வைத்தால் அந்த அறையில் எங்கும் பல்லிகள் வராது. இது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை. இதற்காக நீங்கள் எந்த செலவும் செய்யத் தேவையில்லை. அதிகம் மெனக்கெடவும் தேவையில்லை.

அடுத்ததாக மயிலிறகு பல விதமான தோஷங்களை போக்க வல்லது. முருகனின் வாகனமாக மயில் இருப்பதால், மயில் தோகை புனிதமாக கருதப்படுகிறது. இதனால் இதை சிலர் பூஜை அறைகளிலும் வைத்து வழிபடுகின்றனர். அதிலும் குறிப்பாக வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் மயில் இறகை ஐந்து என்ற எண்ணிக்கையில் எடுத்து ஒன்றாக சேர்த்து வெள்ளை நூல் கொண்டு கட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

அதேபோல் சனி தோஷம் நீங்க நீண்ட விஸ்தாரமான மயில் இறகுகளை மூன்று என்ற எண்ணிக்கையில் எடுத்து சனிபகவானுக்கு உகந்த கருப்பு நூல் கொண்டு கட்டி பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் சனி தோஷம் விலகி நன்மைகள் நடைபெறும். மயிலிறகை பணம் வைக்கும் பெட்டியில் அல்லது பீரோவில் வைப்பதால் பணம் ஈர்க்கும் சக்தி உருவாகும் என்றும் கூறப்படுகிறது. மயில் இறகை உத்தியோகம் செய்யும் இடத்தில் அல்லது வியாபார ஸ்தலத்தில் வைத்துக் கொள்வதால் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும். உற்பத்தி திறன் பெருகும் என்றும் கூற்றுகள் உள்ளன.

நம் வீட்டின் நுழைவு வாயிலில் மயில் இறகை மாட்டி வைப்பதால் எதிர்மறை சக்திகள் நீங்கும், எதிர்மறை சக்திகள் உள்ளே வருவதும் தடுக்கப்படும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. இப்படியாக மயிலிறகு நமக்கு பல நன்மைகளை பெற்று தரும்.

You may also like

Leave a Comment

Translate »