Home ஆன்மீக செய்திகள் மற்ற விரதங்களை விட சிறப்பு வாய்ந்த ஏகாதசி விரதம்

மற்ற விரதங்களை விட சிறப்பு வாய்ந்த ஏகாதசி விரதம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஏகாதசி’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில், `பதினொன்று’ என்று பொருள். அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்த 11-வது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது `ஏகாதசி திதி விரதம் என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும்.

வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது_நம்பிக்கை. வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட_ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ என்வும் அழைக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசி யன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது .ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

ஏகாதசி எப்படி உருவானது

சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களைதுன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள்படும் துன்பத்தைஎடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர்புரிந்தார். இந்த போர் பல வருடங்கள்தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருகுகையில் நன்றாகஉறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒருபெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்குசென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.

தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்ததேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டதுஎன்பதையும் உணர்ந்து, அந்ததேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.

“நீ தோன்றிய இந்தநாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகலநன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசிவழங்கி, பிறகு அந்தஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்

ஏகாதசி அன்று உணவினை உண்ணாமல் இருப்பது நல்லது. உண்ணாமல் இருக்க முடியாதவர்கள்  பழங்கள் மற்றும் பால் உண்ணலாம்.இரவு முழுவதும் உறங்காமல் விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.ஏகாதசிக்கு அடுத்த நாள்  துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் பெருமாள்  கோவிலுக்கு சென்று  வந்த பிறகு  உணவினை உண்ணலாம்.

ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

You may also like

Leave a Comment

Translate »