Home ஆன்மீக செய்திகள் சைவ-வைணவ ஒற்றுமை உணர்த்தும் கோவில்

சைவ-வைணவ ஒற்றுமை உணர்த்தும் கோவில்

by admin

தாடிக்கொம்பு பெருமாள் கோயில், சைவ-வைணவ ஒற்றுமையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த கோவிலில் உள்ள சிலைகள் சைவ-வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கின்றன.

தாடிக்கொம்பு பெருமாள் கோயில், சைவ-வைணவ ஒற்றுமையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அர்த்தமண்டபம் முடிந்து மகாமண்டபம் துவங்கும் முன்பு, நின்ற கோலத்தில் அருள் வழங்கும் விநாயகரையும், விஷ்ணு துர்க்கையையும் காணலாம்.

மகாமண்டபத்திலுள்ள பதினான்கு தூண்களில் ஊர்துவதாண்டவ நடராஜரும், தாண்டவ காளியும், அகோரவீரபத்திரரும் சிலாவடிவில் சிற்பக்கலையின் நேர்த்தியைப் பறைசாற்றும் வகையில் நிற்பதோடு, சிவ-வைணவ ஒற்றுமையையும் எடுத்துரைக்கின்றனர்.

ஒரே கல்லில் வடிக்கப்பட்ட இச்சிலைகளின் பேரழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றுகிறது. மகாமண்டபத்தில் விநாயகர், விஷ்ணு துர்க்கையை அடுத்து சங்கீதத் தூண்கள் இரண்டு இருக்கின்றன.

You may also like

Translate »