பிரம்ம ஹத்தி தோஷம்:-
இரண்டு விதமான பிரம்மகத்தி தோஷம் உண்டு
1. குரு + சனி சேர்க்கையால் வருவது
2. தர்மகர்மாதிபதி யோகத்தால் வருவது
பிரம்மகத்தி தோசம் வரக்காரணம் ஒரு காலத்தில் அவர்கள் ராஜாவாக இருந்து மனிதர்களை சிறை சேதம் செய்து இருப்பார்கள்..
குரு + சனி சேர்க்கை முன் ஜென்மத்தில் செல்வாக்காக வசதியாக வாழ்ந்து இருப்பார்கள் அந்த செல்வாக்கால் செய்த புண்ணியத்தால் குரு + சனி இந்த கிரக சேர்க்கைகள், இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் அவர் எப்படியும் நல்ல நிலமைக்கு வந்து விடுவார்..
இந்த குரு சனி சேர்க்கை தான் 100 % மதிப்பெண், குரு மட்டும் சனியை பார்ப்பது 50 % மதிப்பெண்மதிப்பெண் தான், குரு சனி சம சப்தம பார்வையாக பார்ப்பது 100 % மதிப்பெண் இது எல்லாம் பிரம்மகத்தி தோசம் தான் பிரம்மகத்தி தோஷத்திற்கு செவ்வாயின் தொடர்பு இருந்தால் அவர்கள் கட்டாயம் பிரம்மஹத்தி தோஷத்தை கழிக்கக்கூடாது , குரு சனி சேர்க்கையை செவ்வாய் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் பரிகாரம் செய்யக் கூடாது , அப்படி இருந்து பரிகாரம் செய்தால் அந்த நபரின் வருமானத்தை எவ்வளவு சம்பாதித்தாலும் தங்காது, வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும், மன உழைச்சல் அதிகமாகி கொண்டே இருக்கும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இருக்காது, இறப்புக்கு சம்பந்தமானதை கொடுக்கும்.
குரு சனியுடன் செவ்வாய் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோசத்தை கழிக்கலாம், திருவிடை மருதூர் அங்கு அனுஷ நட்சத்திரம் அன்று சென்று அங்கு சொல்லும் வழிமுறையில் இந்த தோஷத்தை நிவர்த்தி செய்வது சிறப்பு இது பெரிய மஹா லிங்கேஸ்வரர் கோவில்.
ஒரு ஜாதகத்தில் தருமகர்மாதிபதி யோகம் இருந்தால் அவர் பயப்பட தேவையில்லை ஜாதகர் ஆலமரத்தடியில் பாதுகாப்பாக உள்ளார் என்று அர்த்தம் இவர்கள் எந்த பரிகாரமும் செய்யாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டுமே பார்த்தால் போதும்..
பிரமகத்தி தோஷம் உள்ளவர்கள் தினமும் காகத்திற்க்கு சாதம் வைத்து வருவதும் மிகச் சிறந்த பரிகாரம்..