தீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பல மந்திரங்கள் இருப்பதாக கூறப்படினும் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமாக இந்த மந்திரம் கருதப்படுகிறது.
தீய சக்திகளிடம் இருந்து காக்கும் ஸ்ரீ சுதர்சன சக்கர மந்திரம்
ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :
ஓம் நமோ சுதர்சன சக்ராய |
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா
மஹாரக்ஷையாக, சக்தி வாய்ந்ததாக விளங்கும் இந்த மந்திரத்தைச் சித்தி செய்யும் முறை மிக எளிது. ஒரு சூரிய அல்லது சந்திர கிரகணத்தன்று விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி வைத்து 1008 தடவை ஜெபிக்கச் சித்தியாகும். பின்னர் தேவையான போது 3 தடவை ஜெபிக்க எந்தவிதமான ஆபத்துக்களில் இருந்தும், கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும்.
சைவ உணவு உண்பவர்கள் மட்டும் இம்மந்திரத்தை ஜெபிக்கவும்.உங்களையும் வசிப்பிடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.அல்லது ஏதேனும் விஷ்ணு ஆலயத்தில் வைத்து ஜெபிக்கலாம்.