Home Uncategorized ஸ்ரீ சுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தவம் | குமார தந்திரம்

ஸ்ரீ சுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தவம் | குமார தந்திரம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது.

 

அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்

ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்

ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்

அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

 

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

 

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்

ரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தங்களை சரணடையும் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

 

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்

தீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

 

பலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே!

ரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனும்  ஆன ஸ்கந்தனே! எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

 

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்

வவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

 

நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

 

பகவன் பார்வதீஸுநோ! ஸ்வாமின் பக்தார்திபஞ்சன!

வத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

பகவானே! பார்வதி குமாரா! தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்குகின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.

 

ஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ச ஸ்ந்ததே:

சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

 

தங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, அளவற்ற செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

 

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்

ய: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:

 

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர  ஸ்தோத்திரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக அளவற்ற  செல்வங்கள் கிடைக்கும்.

 

You may also like

Leave a Comment

Translate »