முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
நாராயணர் கோவிலாக இருந்தாலும் சரி;
சிவாலயமாக இருந்தாலும் சரி;
நரசிம்மர் ஆலயமாக இருந்தாலும் சரி;
பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அம்பாள் ஆலயமாக இருந்தாலும் சரி;
Gomathi Chakra tree – vastu product
தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும்.
சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றன என்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள்.
ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம்.
ராமர் கணையாழி
ராமபிரான், ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும். அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும்.
கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளி யிருக்கிறார்.
பிள்ளையார் சுழி
கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன் உட்பொருள், சுபம் மற்றும் லாபம் என்பதாக உள்ளது. சுதர்சன சக்கரத்திற்கும் முந்தையதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது.
நட்சத்திர பாகங்கள்
அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம்.
* அசுவினி, பரணி, கிருத்திகை – நெற்றி.
* ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை – முகப்பகுதி.
* புனர்பூசம், பூசம் – இரு தோள்கள்.
* ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் – மார்பு பகுதி.
* சித்திரை – வயிற்று பகுதி.
* சுவாதி, விசாகம் – புஜங்கள்.
* அனுசம் – உடலின் மைய பகுதி.
* கேட்டை, மூலம் – இரண்டு கைகள்.
* பூராடம், உத்திராடம் – இரண்டு தொடைகள்.
* திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி – கால் பாதங்கள்.
நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோமதி சக்கரத்தின் சிறப்பு
* வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்கரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம்.
* கோமதி சக்கரமானது பூஜையில் வைக்கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக்கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.
* வில்வ இலையானது காய்ந்து விட்டாலும், ஆறு மாதங்கள் வரையில் பலன் தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவு நாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடியது. இன்றைக்கும் வடமாநிலங்களில் உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்கரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.
* பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப்பைத் தரும்.
* மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ்வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது.
* ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது. மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகியவற்றில் அமைந்திருக்கும். நம்முடைய காதுகளின் அமைப்பும் வலஞ்சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல்படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய்கின்றன.
* கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.
* கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.
* கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.
கோமதி சக்கரம் ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்
#கோமதிசக்கரம்
#கோமதிசக்கரமோதிரம்
#கோமதிசக்கரடாலர்
#11கோமதிசக்கரவழிபாடு
#கோமதிசக்கரம்பயன்கள்
#கோமதிசக்கரமரம்
#வாஸ்துபொருட்கள்
#செல்வம்சேர
#தனஆகர்ஷனம்
#செல்வவளம்
#onlinepoojastore
#பூஜாஸ்டோர்ஆன்லைன்
#தெய்வீகபொருட்கள்
#தெய்வீகபூஜைபொருட்கள்
மேலே காணப்படும் யந்திரத்தை குபேர யந்திரம் என்கிறார்கள். இது குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது லஷ்மி தேவியை வணங்கி பெற்றதாம். ஆகவே நாமும் அந்த எளிய குபேர பூஜையை செய்ய நமக்கு நல்லது கிட்டும் .
அந்த பூஜை முறையை எனக்கு நல்ல பண்டிதம் பெற்றுள்ள ஒரு பண்டிதர் கூறினார். அதை அனைவருக்கும் பலன் அளிக்கும் வகைக்கு வெளியிட்டு உள்ளேன். அந்த எளிய பூஜையை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கடன்கள் தீரவும், செல்வம் பெருகவும் மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அதை செய்ய வீட்டில் பணப் தட்டுப்பாடு இருக்காது என்பது உண்மையாம். இந்த பூஜைக்கு கஷ்டமான சொற்களைக் கொண்ட சம்ஸ்கிருத சுலோகம் கூற வேண்டும் என்பது முக்கியம் இல்லை. ஸ்லோகங்களே தெரியாதவர்களும் செய்யக் கூடிய மிக எளிய பூஜை இது. இதற்கு முக்கியம் நம்பிக்கை, செய்யும் முறை, செய்வதில் த்யானம் என்பவை மட்டுமே.
இந்த பூஜையை துவக்கும் முன் நமக்குத் தேவை ஒரு ஒரே மாதிரியான நாணயங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப நாணயங்களை எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் என்ற மதிப்பு அதிகமான நாணயம் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல எட்டணா, நாலணா என எதுவாக இருந்தாலும் நம் உபயோகத்தில் உள்ள நாணையமாக அது இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.
நாம் பூஜையை துவக்கும் முன் முதலில் எந்த நாளில் பூஜை செய்ய உள்ளோம் என்பதை அதாவது வெள்ளிக் கிழமையா அல்லது பௌர்ணமி தினத்திலா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி நாம் முடிவு செய்து உள்ள வெள்ளிக் கிழமைகளிலும் பௌர்ணமி போன்ற தினங்களிலும் காலை குளித்துவிட்டு கீழே உள்ளபடி கோலத்தை பூஜை அறையில் கடவுளுக்கு முன்னால் போட வேண்டும்.
எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை நல்ல சிவப்பு குங்குமத்தினாலும், வார்த்தைகளை (ஸ்ரீ) மஞ்சள் பொடியினாலும் கீழே உள்ளபடிப் போட வேண்டும்.
பூஜை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவருடைய வீட்டில் உள்ள வாரிசுகள் அல்லது கணவர் அதை தொடர்ந்து செய்யலாம். ஆனால் அந்த நபர் அதே குடும்பத்தினராக இருக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயம் உபயோகிக்க உள்ளீர்கள் என்றால் அனைத்திலும் ஒரு ரூபாய் நாணயம் உபயோகிக்க வேண்டும். அது போல எந்த நாணயம் பயன்படுத்துகிறீர்களோ அதே போன்ற நாணயத்தை ஒன்பது நாட்களும் பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரே மாதிரியான எண்பத்தி ஒரு நாணயத்தை முதலில் சேர்த்து வைத்துக் கொண்டே பூஜையை துவக்க வேண்டும்.
காலை குளித்துவிட்டு இந்த யந்திரத்தை பூஜை அறையில் மேலே கூறப்பட்டு உள்ளபடி தம் கைப்பட போட வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும்தாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து ஒன்பது தினங்கள் – அதாவது வெள்ளிக் கிழமை என்றால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமை என – பூஜிக்க வேண்டும். ஒன்பது வெள்ளிக் கிழமைகள் அல்லது ஒன்பது பௌர்ணமி என ஏதாவது குறிப்பிட்ட நாளில் துவக்கி, அதே தினங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில், எழுத்துக்கள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டு அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும். கீழே உள்ள மாதிரிப் படத்தைப் பார்க்கவும்.
குபேர யந்திரக் கோலம் போட்டு நாணயங்களையும் அதில் வைத்து முடித்ததும் யந்திரத்தின் முன் ஒரு சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை துவக்க வேண்டும். பூஜையில் கூற வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா? மிகவும் சுலபமாகக் கூற முடியும் சுலோகம் அது! ‘ தாயே, மகாலஷ்மி, என்னுடைய கடன்கள் விரைவில் தீர வேண்டும், தாயே மகாலஷ்மி எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் வர வேண்டும், தாயே மகாலஷ்மி எனக்கு நிறைய லாபம் வர வேண்டும், இப்படியாக எந்த பணப் பிரச்சனைக்காக வேண்டுகிறீர்களோ அதை கூறி விட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும் பூக்களை போட வேண்டும். அப்படி பூக்களைப் போடும்போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயத்தின் மீதே பூக்களை போட வேண்டும். படத்தைப் பார்க்கவும்.
அப்படி ஒன்பது முறை வேண்டிக்கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்தப் பின் யந்திரத்துக்கு கற்பூரம் காட்டியப் பின் அந்த கோலத்தை வணங்கிவிட்டு பூஜையை முடித்து விடலாம். ஆக பூஜையில் நாம் கூற வேண்டியது மந்திரம் அல்ல, அது நம்முடைய பக்திபூர்வமான கோரிக்கைதான். வேறு சுலோகம் தெரியும் என்றால் கற்பூரம் காட்டும் முன்னால் அதை கூறிவிட்டு கற்பூரம் காட்டலாம். ஆனால் இந்த பூஜைக்கு வேறு சுலோகம் கூற வேண்டும் என்பது அவசியம் இல்லை. அப்படி சுலோகங்களைக் கூறினால் பலன் விரைவில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால் பூஜைக்கு தேவை நம்பிக்கையும் மேலே கூறப்பட்டு உள்ள த்யான மந்திரமும் மட்டுமே .
பூஜை முடிந்தப் பின் கோலத்தை உடனே அழித்து விடக்கூடாது. மறுநாள்தான் அதை ஒரு துணியினால் துடைத்து எடுக்க வேண்டும். மறுநாள்வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். யந்திரத்தின் மீது நேரடியாக விளக்குமாற்றால் பெருக்கக் கூடாது. துணியினால் அதை அழித்தப் பின்னரே பெருக்கலாம். கோலத்தை துடைக்கும் முன்னால் அந்த ஒன்பது நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் எண்பத்தி ஒரு நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை எந்த காரணத்தைக் கொண்டும் வேறு வகைக்கு செலவு செய்யக் கூடாது. சில்லறை வேண்டும் என்பதற்காக அதை மாற்றி வைத்துக் கொள்ளக் கூடாது. அது லஷ்மி தேவிக்கு தரப்படும் பூஜிக்கப்பட்ட காணிக்கை பணம் ஆகும்.
அதன் பின் அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு,பழம் தர வேண்டும். வீட்டிற்கு வரும்வகையில் சுமங்கலிகள் கிடைக்கவில்லை எனில் ஆலயத்தில் சென்று அங்குள்ள ஏதாவது ஒன்பது சுமங்கலிப் பெண்மணிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணுக்கும் கூட வெற்றிலைப் பாக்கு ,பழம் தரலாம். அவர்களும் கிடைக்கவில்லை என்றால் லஷ்மியின் சன்னதியில் அதை அவர் முன் வைத்துவிட்டு வரலாம்.
பூஜை முடிந்த ஒன்பதாம் நாளன்று கண்டிப்பாக பூஜை செய்தவர் ஏதாவது ஒரு லஷ்மியின் ஆலயத்துக்குச் சென்று தம்முடைய அதே பிரச்சனையைக் கூறி அவளை அதை களையுமாறு வேண்டிக் கொண்டு வர வேண்டும். தனி லஷ்மி ஆலயம் இல்லை என்றாலும் கவலை இல்லை. வேறு எந்த ஆலயத்துக்காவது சென்று லஷ்மியின் சன்னதிக்கு சென்று வேண்டுதலை செய்தப் பின் ஒன்பது நாட்களும் பூஜை செய்து வைத்த எண்பத்தி ஒரு நாணயங்களையும் லஷ்மி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதைப் போடும்
முன்னால் தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கையைப் போல தனக்கும் பல மடங்கு செல்வம் தர வேண்டும் என லஷ்மி தேவியை மனமார வேண்டிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூஜை முடிந்தது. அடுத்த பூஜையை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் துவக்கலாம். சாதாரணமாக பூஜை செய்து முடியும் முன்னரே பலன் கிடைக்கும் என்கிறார்கள். ஆகவே வேண்டிய பலன் கிடைத்து விட்டாலும் ஒன்பது நாட்கள் அந்த பூஜையை செய்து முடிக்காமல் விடக்கூடாது. அதுவே பிரார்த்தனை செய்யும் முறை.
இந்த பூஜையை குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்பதல்ல. வசதி உள்ளவர்கள் எந்த பிரச்சனைக்கும் அல்லாமல் தொடர்ந்து குறிப்பிட்ட தினத்தில் பக்தியுடன் செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும். பணப் பிரச்சனை இருக்காது. செல்வம் நிலைக்கும். அப்படி பொதுவாக செய்யும் பூஜையின்போது நாம் கூற வேண்டிய த்யான சுலோகம் ” அம்மா, மகாலஷ்மித் தாயே , நீ எங்களுடைய வீட்டில் நிரந்தரமாகத் தங்கி எங்களைக் காத்தருள வேண்டும் ” என்பதே.
குபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு தான்..!
அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும்.
வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.
கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.
குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.
சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.
புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர். எனவே இதை இழிவு படுத்தவோ அவமதிக்கவோ கூடாது.
காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் செய்ய வேண்டிய எளிய
இறைவழிபாடுகள் உண்டு. சித்த புருஷர்கள் அருள்கின்ற இவ்வெளிய இறை வணக்க முறைகளைப் பின்பற்றினால் நித்ய வாழ்க்கை சாந்தமாக, சீராக அமையும். காரணம், இறையருளன்றி நம் விரலை ஒரு முறை கூட அசைக்க முடியாது என்பதை உணர உணர “எல்லாம் அவன் செயல், அனைத்தும் நம் கர்ம வினைப்படியே நடக்கின்றது, அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம்” என்ற பேருண்மை புலப்படத்துவங்கும்.
இதற்காகவே நம் தினசரி வாழ்க்கை துவங்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் எழும் போது “பிராப்தப் பிங்களாசனம்” என்ற எளிய ஆசனத்தையும் “சங்கர நாராயண கர தரிசனத்தையும்” சித்த புருஷர்கள் அளித்துள்ளனர். இறை நினைவோடு எழுந்தால் அதுவே உத்தமமானது. திடுக்கிட்டு எழுதல் கூடாது. தானாகவே சாந்தமாகத் துயிலெழுகின்ற தன்மையைப் பெற வேண்டும். இதற்கு சில சயன யோகப் பயிற்சி முறைகள் உண்டு. இதைத் தக்க குருவை நாடி அறிதல் வேண்டும்.
ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனம்
விடியற்காலையில் எழுவதே சிறந்தது. விழிப்பு நிலையை உணர்ந்தவுடன் கண்களைத் திறவாது இரு கரங்களையும் ஒன்று சேர்த்து, உள்ளங்கைகளைப் பரந்து, விரித்து இரு கண்களால் இரு உள்ளங்கைகளையும் தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசிக்கின்ற போது வலது உள்ளங்கை பகுதியில்: சுக்கிர விரல் (கட்டை விரல்), குருவிரல் (ஆள்காட்டி விரல்), சனி விரல்களின்(நடுவிரல்) கீழ்ப்பகுதிகளில் சிவ லிங்க தரிசனம் தருவதாக பாவித்து, உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் ஸ்ரீகோமதி அம்பாள் தரிசனம் தருவதாகவும் பாவித்து துதிக்க வேண்டும். இடது கை பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. வலது கையில் இருப்பதே இடது கைகளிலுமுள்ளது. எனவே பிரபஞ்சமாயும், பிரபஞ்சத்தினுள்ளும், பிரபஞ்சத்திற்கு அப்பாலுமாய் விளங்கும் ஹரிஹர சக்தி ரூபம், பரப்பிரம்மம், பிறகு கை கூப்பி ஸ்ரீஉத்தாதலகர் வந்தனம் என்று வணங்கி மீண்டும் உள்ளங்கைகளை விரித்து “ஸ்ரீஉத்தாதலகர் மஹரிஷியே போற்றி” அல்லது”ஸ்ரீ உத்தாதலகராய நம:” என்று ஸ்ரீ உத்தாதலகர் மஹரிஷியைப் போற்றி வணங்க வேண்டும். காரணம் என்ன?
ஸ்ரீசேஷ்டா தேவிஅமுதம் பெற தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலை கடைந்த போது மூத்த தேவி என்ற ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்தனள் (நாம் வழக்கில் “மூதேவி” என்று அழைப்போம், இது மிகவும் தவறு). ஸ்ரீசேஷ்டா தேவி அவதரித்த போது எவரும் ஏற்கவில்லை. இதனால் சினமுற்ற மூத்த தேவி சிவனிடம் ஓடுகிறாள். “சிவபெருமானே! பாற்கடலில் பதிந்து கிடந்த என்னை அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்து என்ன எழும்பச் செய்தனர். பெண் குலத்தில் உதித்த என்னை மூத்த தேவி என்பதால் அசுரர்களோ, தேவர்களோ யாரும் ஏற்கவில்லை. நான் நுழைந்தால் அங்கே செல்வம் நிற்காது என்பதால் என்னைக் கண்ட அனைவரும் ஓடுகின்றனர். செல்வமில்லாக் குறை எனதல்லவே? என்னைப் படைத்ததற்குரிய தொழிலைத்தானே நான் செய்ய முடியும். பாற்கடலில் வசித்த என்னை எழுப்பியது அவர்கள் குற்றமல்லவா? என்னை யாரும் ஏற்காவிடில் நான் எங்கு செல்வேன்? தாங்கள் தான் எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று வேண்டினாள்.
வேண்டியதை வேண்டியபடி உடன் அருளும் கருணை வெள்ளமல்லவா சிவபெருமான். மூத்த தேவி சாபமிட்டால் அது பலித்து தேவர்களையும் அசுரர்களையும் தாக்கும். எனவே சிவபெருமான், யாரொருவர், மூத்த தேவியை மணக்கிறாரோ அவருக்கு விசேஷமான சக்திகள் உருவாகும், என்று அறிவித்தும் ஒருவரும் முன்வரவில்லை. காரணம் மூத்ததேவி எங்காவது நுழைந்தால் எனில் அங்கு தரித்திரம் தாண்டவமாடும் என்பதால் தான். ஆனால் ஸ்ரீஉத்தாதலகர் என்ற முனிவர் எவ்வித சுயநலமின்றி மணக்க முன் வந்தார். இவர் தான் உலகிற்கு கடுக்கனின் மஹிமையை வெளிப்படுத்தியவர். தியாகசீலங்கொண்ட தவசீலர். எவ்வித எதிர்ப்பார்ப்புமின்றியும் விசேஷ சக்திகளைக் கூட எதிர்பாராது தன்னலமின்றி அவர் மூத்த தேவியை (ஸ்ரீசேஷ்டா தேவி) மணந்தார்.
மூத்த தேவியை மணந்தவுடன் வறுமையும், பசியும், தரித்திரமும் அவர் குடிலில் தாண்டவமாடின. அவற்றை உவப்புடன் ஏற்று, திறந்த உள்ளத்துடன், மனநிறைவுடன் மூத்த தேவியுடன் நன்கு வாழ்ந்து அவர் தேவ லோகத்தை ஒரு சாபத்திலிருந்து மீட்டார். ஸ்ரீஉத்தாதலகரின் தன்னலமில்லாத் தொண்டை கண்டு சிவபெருமானே மகிழ்ந்து மூத்த தேவி வாக்கின் மூலம் ஸ்ரீஉத்தாதலகருக்கு அனுக்ரஹம் புரிந்தார்.
மூத்ததேவி, “முனி சிருஷ்டரே அனைவரும் என்னை வெறுத்து ஒதுக்க, தாங்கள் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, சுயநலங்கருதாது என்னை மணந்து ஒரு மஹரிஷியின் பத்தினி என்ற ஸ்தானத்திற்கு உயர்த்தி விட்டீர்கள். சிவனருளால், இன்றிலிருந்து யாரொருவர் விடியற்காலை எழுந்த உடன் தன் கரங்களை மலர விரித்து வலது உள்ளங்கைக் கீழ் மேட்டைப் பார்த்து தரிசனம் செய்து “ஸ்ரீஉத்தாதலகராய நம:” என்று தங்கள் திருநாமம் செப்பித் துதிக்கின்றார்களோ அவர்கள் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வர். தங்களை கரம் மூலம் தரிசனம் பெறும் போது தங்களது தன்னலமில்லாத தொண்டும், எதுவரினும் ஏற்போம் என்ற கர்மயோக மனப்பான்மையும் அவர்களிடம் உருப்பெற வேண்டும்” என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தாள்.
எனவே சித்தர்கள் அருள்கின்ற காலை இறை வழிபாட்டில் :
1. ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனமும்
2. ஸ்ரீஉத்தாதலகர் தியானமும் இடம் பெறுகின்றன.
இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கப் பட்டாலும் இவ்விரண்டையும் நிறைவேற்றிட பத்து வினாடிகள் கூட ஆகாது! என்னே, எளிய வழிபாடு! ஆனால் பெறுகின்ற பலன்களோ அபரிதம்.
பிராப்தப் பிங்களாசனம்விழிப்புணர்ச்சி வந்தவுடன் இடது புறம் ஒருக்களித்து அந்நிலையிலேயே இடது கையைத் தரையில் அல்லது கட்டிலில் ஊன்றி சாய்ந்த நிலையிலேயே எழுந்து உட்கார வேண்டும். இம்முறையினால் வலது புற நாசியில் சூரிய கலையில் சுவாசம் சீராக ஓடி மனத்தினைச் சாந்தப்படுத்தும்.
1. இதனால் இரத்த அழுத்த நோய்கள் தணியும்.
2. என்ன ஓட்டங்கள் குறைந்து சீர்படும்
3. ஆழ்ந்த மூச்சு சுவாசம் ஏற்படும்.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இதன் பின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், பெற்றோர்கள், குலகுரு ஆகியோரை மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். இவ்வெளிய முறைகளையே ப்ராத்த பூஜை (காலை பூஜை) என சித்த புருஷர்கள் அருள்கின்றனர். உள்ளங்கை தரிசனமே நவகிரகங்களின் தரிசனமாக மலர்ந்து நம் நித்திய வாழ்வின் கர்மங்களைப் பகுத்து வகுக்கின்ற ஸ்ரீ நவகிரஹ மூர்த்திகளின் அருளையும் பெற்றுத் தருகிறது. எவ்வாறு?
1. கட்டை விரல்…. சுக்கிரன்
2. ஆள்காட்டி விரல் ….. குரு
3. நடுவிரல்…..சனி
4. மோதிர விரல்…..சூரியன்
5. சுண்டு விரல்…..புதன்
உள்ளங்கை = சந்திர மேடு
மேடுகள் = செவ்வாய் மேடு
ராகுவும் (Moon’s Ascending Node) கேதுவும் (Moon’s Descending Node), பழங்கால வானியியல் கணிதப்படி சனி, செவ்வாய் கிரகங்களின் பாற்படும்.
இதன் பிறகு பெற்றோர்களை நமஸ்கரித்தல் அல்லது மானசீகமாகவேனும் நமஸ்கரித்தல், குலதெய்வ, இஷ்ட தெய்வ மூர்த்திகளைத் தியானித்தல், குரு தியானம் இவற்றுடன் காலை வழிபாட்டின் முதல் அம்சம் நிறைவு பெறுகிறது
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்…கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்…குழந்தை அழாமல் தூங்கி விடும்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்…வாசலுக்கு மேல்…ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்…செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்…
மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்…நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்.. அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும். அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்…வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்.. இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்….
உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் .
பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் .
திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவதால் கிரிவலம் வரும் பக்தர்கள் உரக்க பேசாமலும் ,யாருக்கும் இடையூறு செய்யாமலும் அமைதியாக “சிவாய நமஹ” என்று சொல்லி கிரிவலம் செல்ல நாம் கிரிவலம் செல்வதன் உண்மையான பலன் ஏற்படும் .
திருவண்ணாமலையை( thiruvannamalai) கிரிவலம் செல்லும் போது ஒருவர் இறந்துவிட்டால் அவர் உயிர் நேரே கயிலாயத்திற்கு செல்லும். அப்படிச்செல்லும் போது சந்திரன் வெள்ளைக் குடைபிடிப்பார் என்றும் ,சூரியன் கையில் விளக்கேற்றி வருவார் இந்திரன் மலர் தூவுவார் ,குபேரன் பணிந்து வரவேற்பார் என்று அருணாசலீஸ்வரர் ஸ்தல புராணம் இயம்புகிறது.
திருவண்ணாமலையை கிரிவலம் செய்யும் கிழமைகளின் பலன்கள் :
ஞாயிறுக்கிழமே – சிவபதம்
திங்கள் கிழமை உலகாளும் வல்லமைகிட்டும்
செவ்வாய்கிழமை – கடன் ,ஏழ்மைகள் விலகி பிறவிப் பிணியில்
இருந்து விடுதலை கிட்டும்
புதன் – கலைகளில் தேர்ச்சி
வியாழக்கிழமை- ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிட்டும்
வெள்ளிக்கிழமை – விஷ்ணுபதம் கிட்டும்
சனிக்கிழமை – நவகிரகங்களை வழிபட்டதன் பலன் கிடைக்கும் .
தீபத் திருவிழா திருவண்ணாமலையில் பத்து நாட்களுக்கு நடைபெறும் .2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.7 அடி உயரமுடைய செப்புக்கொப்பரையில் 3000 கிலோ நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் காடா துணியால் 10நாட்களுக்கு தொடர்ந்து கார்த்திகை தீபம் எரிந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும் .
மலையே சிவனாக ,நினைத்தாலே முக்தி தருகின்ற அரிய சிறப்புகளை உடைய சிவபெருமானை கிரிவலம் வந்து கார்த்திகை தீபத்தையும் தரிசித்து எல்லா நலமும் வளமும் பெறுங்கள் .
சூரியனும், சந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வலம் வந்து வழிபட்ட அஷ்டலிங்க சன்னதிகளுக்கு நடுவே, கிரி உருவான கருணைக்கடலாக காட்சி தரும் ஜோதிமலை, வலம்வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் அருள்மலை.
சித்தர்களும்,ரிஷிகளும்,யோகிகளும்,மகான்களும் தவமிருந்து வழிபட்ட இன்றைக்கும் அருவமாக வலம் வந்து வழிபடுகிற அண்ணாமலையை கிரிவலம் செல்லும் பக்தர்கள், மூலிகை, சந்தனம், ஜவ்வாது, சாம்பிராணி, விபூதி, வாசமலர்களின் நறுமணங்களை உணரமுடியும். உற்சவ மூர்த்தியாகிய அண்ணாமலையார் உமையாளுடன் கார்த்திகை தீபத்தின் அடுத்த நாளும், திருவூடல் விழாவின்போதும் வலம் வரும் தனிப்பெரும் பேறு பெற்றது திருவண்ணாமலை எனும் கிரிவலமலை. அஷ்ட திக்கு பாலகர்களும் வலம் வந்து வழிபட்ட புனித மலை.
ஆயுட் காலத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித் தொல்லையை காக்க கூடியது திருநள்ளாறு. பிணிகளை போக்குவது வைதீஸ்வரன் கோயில். ஆனால் ஊழ்வினை நீங்கி பெருவாழ்வு பெற அண்ணாமலையார் குடிகொண்டுள்ள திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதாலேயே அடைய முடியும். பிறவிப்பிணி நீங்கச் செய்யும் வல்லமை கிரிவலத்துக்கு மட்டுமே உண்டு.
மலை வலம் செல்ல ஒரடி எடுத்து வைத்தாலே ஓரு யாகம் செய்த பலனை பெருவோம், ஈரடி எடுத்து வைத்தால் ராஜசூய யாக பலனை பெருவோம். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவோம். நான்கடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களையும் நிறைவேற்றிய பலன் பெறுவோம் என்பது சித்தர்களின் வாக்கு.
உள்ளீடற்ற உன்னதமான மலையில் இருந்து சிவந்த ஜோதி கதிர்கள் எப்போதும் வெளிபடுவதை உணர்ந்து உலகுக்கு உணர்த்தியவர் மகான் ரமணர். பவுர்ணமி நாட்களில் அது பன்மடங்காக வெளிப்படுகிறது. மலைவலம் வருவோர் அதன் பயனை உணர்கின்றனர்.
மலைச்சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் சிவனடியார்கள். மலைவலம் தொடங்கும் முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்னீராட வேண்டும். திருநீறு ஆணிந்து, ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே செல்லவேண்டும். வெயிலுக்கோ, மழைக்கோ அஞ்சி குடை பிடித்து செல்வது பாவம். மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலை வலம் தொடங்குவது சிறப்பு. இயலாதோர் தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்யலாம். கோபம் பாவம் போன்ற எதிர்வினை உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஓருமித்த சிந்தையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் மலைச் சுற்ற ஏற்றதாகும். மாதப்பிறப்பு நாட்களில் மலை வலம் வருவது நல்லது. மலைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும். தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது பயன்தரும். கிரிவலப் பாதையில் எம லிங்கத்தை கடந்து சென்றால் நந்திகேஸ்வரர் சன்னதி அமைந்திருக்கும். மலைச்சுற்றுவோர் தவறாமல் தரிசிக்க வேண்டி சன்னதி. அதுதான் மலைச்சுற்றுவோருக்கு இறைவன் அனுப்பிய அதிகார நந்தி. மலையை ஓட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு. மலைச்சுற்றி நிறைவு செய்யும்போது ஈசான்ய லிங்கத்தை தரிசித்து செல்வதே முழுப் பயனைத் தரும். மலைவலம் தொடங்கும் போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு. கிரிவலம் முடித்ததும் குளிப்பதையும் உறங்குவதையும் தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.
★திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்★
★இந்திரலிங்கம்★
★கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
★அக்னி லிங்கம்★
★இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
★எமலிங்கம்★
★கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
★நிருதி லிங்கம்★
★மலை சுற்றும் பாதை யில் 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
★வருண லிங்கம்★
★ ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
★வாயு லிங்கம்★
★இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
★குபேரலிங்கம்★
★7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.
★ஈசான்ய லிங்கம்★
★கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.
உலகத்தில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர்கள் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசிகளைப் பெறவில்லை;ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது;
அப்போ கேரளா,கர்னாடகா,ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த ஆசிகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்;அவர்களது மொழியில் அண்ணாமலை கிரிவலம் பற்றிய செய்திகள் மிகவும் குறைவு;கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் அவர்களிடையே ஆன்மீகத்தினுள் நிகழ்ந்திருக்கின்றது; ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
விசிறிச்சாமியார் என்ற யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை; ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்;இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்;இம்மகான்களின் உபதேசங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்;
அதே சமயம்,இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்?
அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!!
சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை;ஆனால்,ஓலைச்சுவடிகள்,தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்;
மனிதனாக பிறந்த நாம் புண்ணிய ஆத்மாவாக இருந்தால் பணம் சம்பாதிக்கவும்,சொத்துக்கள் சேர்க்கவும்,சொகுசாக வாழவும்,காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்;பாவ ஆத்மாவாக இருந்தால்,கடனுடன் காலம் பூராவும் போராடவும்,வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு திண்டாடவும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;
இதற்காக நம்மை ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை;அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்லவே பிறவியை பரம்பொருள் நமக்கு கொடுத்துள்ளார்;
ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000 ஆலயங்கள் இருக்கின்றன;உலகம் முழுவதும் இருந்த ஆலயங்களின் மொத்த எண்ணிக்கை 1000 கோடி ஆகும்;அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப்பட்டிருக்கின்றன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா;பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்;முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து;
ஒவ்வொரு முறையும் அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; அப்படி 14 கி மீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்;இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்;உயிர் உண்டான மந்திரமானது,நமக்கு வழிகாட்டும்;நம்மை பாதுகாக்கும்;
இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்;முறைப்படி தீட்சை பெற்றவர்கள்,உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள்,முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்;
பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது;அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்;
தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்;அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்;
எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்;
காலையில்,மதிய நேரத்தில்,மாலையில்,இரவில்,நள்ளிரவில்,பின்னிரவில்,
அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;
மழை பெய்யும் போதும்,அக்னிநட்சத்திர நாட்களிலும்,கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்;
சிவனை அப்பாவாக,நண்பனாக,மகனாக நினைக்கும் ஒவ்வொருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை;100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகின்றார் என்பதை உணருவார்கள்;
$$$ ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நன்று;
முதல் முறை கிரிவலம் செல்லும் போது:
*******************************************
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
($ நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்;இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப்பரப்பினார்; எனவே,குருவின் அருள் நமக்குத் தேவை;
$ 3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்)
இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
************************************************
ஓம் ஆதிகவசம் சிவகவசம்
சிவன் பிறந்த பரம கவசம்
ஆதிசிவ கவசாய கட்டு சிவாகா
(இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும்,தலைமை கட்டு மந்திரம் இது;இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்;இது நமக்கு கவசம் போல இப்பிறவி முழுவதும் பாதுகாக்கும்)
மூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
***********************************************
சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்
(மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு;கலியுகத்தில் தவறான மனிதர்களே மிக அதிகம்;அவர்கள் மந்திரங்களை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்;இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்;அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்)
நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;
***********************************************
நமச்சிவாய
( $ நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்)
ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
**********************************************
அருணாச்சல சிவ
($அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று;இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் இருந்தால் மட்டுமே முடியும்)
ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:
********************************************
ஓம் ஆம் ஹெளம் செள
($ அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்;செய்து வருகின்றோம்;இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்)
ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:
********************************************
சிவையை நம
($ அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது)
எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
*********************************************
ஓம் ரீங் சிவசிவ
($ சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்)
ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:
************************************************
சிவாய நம
($ நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது)
பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
*********************************************
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
($ ஹரே ராம,ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்;இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும் ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள்)
பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;
**************************************************
சிவசிவ
($ இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்;அவ்வ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;)
பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:
*****************************************************
சிவாய சிவாய
($ நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது)
பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;
***************************************************
சிவாய நம ஓம்
($ சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க வேண்டிய மந்திரம் இது;அதுவும் ஈசன் மனித உருவில் இருக்கும் இடத்தில் இதை ஜபித்தால். . .)
பதினாலாம் முறை கிரிவலம் செல்லும் போது:
**************************************************
சிவயசிவ
($ இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது)
பதினைந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:
****************************************************
அருணாச்சலாய சிவ நமஹ
16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்;
மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி;
01,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
02,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில்
நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
03,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
04,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.
05,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.
06,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
07,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
08.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
09.உப்பை தரையில் சிந்தக்கூடாது.
10.அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
11.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
12.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
15.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
16.ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
17.வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
18.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
19.தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
20.பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
21.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
22.சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
23.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
24.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
25.விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.
26.விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?
27.வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
28.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
30.எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
31.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
32.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
33.எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும
34.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
35.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
36.குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
37.அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
38.பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
39.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
40.வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
41.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
42.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
43.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
44.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
45.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.
46.கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
47.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.
48.பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
49.சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.
50.பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
51.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
52.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
53.நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
54.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
55.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
56.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
57.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
58.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
59.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது
60.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
61.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
62.நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
63.ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
64.வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
65.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
66.குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
67.எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்குஅதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
68.கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.
69.மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]
70.ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்
71.தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.
தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.
72.தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.
73.அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.
74.அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .
75.அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவதுமுதலில் பார்த்து விட வேண்டும்.
76.செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும். வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.
77.ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.
78.வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..
79.நெருப்பும் தண்ணீரும் சிக்கனமாக உபயோகிப்பவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாட்சம் உண்டு.
80.அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு ( அன்னதானம் செய்ய ) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
81.காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க,லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.
82.முதலில் பெண்குழந்தை பிறந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பின் ஆண்குழந்தை பிறந்தால் நல்லது.தம்பி மேல் பாசம் அதிகம் இருக்கும்.
83.நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
* * இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்