தி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.
திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரகணங்களை வீசிடும் திருமேனியவள். பல்வேறு ரத்தினங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள்.
வெண்பட்டாடை உடுத்தி, பலவகையான ஆபரணங்களை மேனி முழுவதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள். சர்வானந்தமயி. என்றும் நிலையானவள்.
மந்திரம்:
ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்: பவுர்ணமி, கிருஷ்ண பட்ச பிரதமை.
பலன்கள்: திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.