Home ஆன்மீக செய்திகள் எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன்

எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன்

by Sarva Mangalam

எந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் என்பதற்கு எளிமையான விளக்கம்  !!!

நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;

நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;

மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;

கடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;

இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.

இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து சேரும்.

எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்;ஆனால்,

நாம் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே,ஓம்சிவசிவஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் பிக்கும்வரையிலும்,நமக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;

நமது மன உறுதியாலும்,குருபக்தியாலும்,சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து,ஓம்சிவசிவஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்துமுடித்துவிட வேண்டும்;அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.

You may also like

Translate »