1. சுகாசனம், அல்லது பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் உங்களுக்கு முடிந்தார்போல எதாவது ஒரு நிலையில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அல்லது வஜ்ராசனத்தில் இருப்பது சிறப்பு…
2. மூச்சை மெதுவாய் நன்றாக உள்ளிழுக்க வேண்டும். ஒரு 5 நொடி மூச்சை அடக்கி கொள்ள வேண்டும்.
3. மூச்சை இனி வெளியே விடும்போது வாயை திறந்து நன்றாக சிரித்து கொண்டே விடவேண்டும். உடலை நன்றாக குலுக்கி குலுக்கி சிரித்து கொண்டே மூச்சை விடவேண்டும்.
4. இதை தினமும் காலையில் எழுந்த உடன் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும் அதே போல் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து செய்ய வேண்டும். தினமும் 2 வேலை செய்ய வேண்டும்.
பலன்:
சிரிபிரானாயாமம் தொடர்ந்து செய்வதால் நம் உடம்பு புத்துணர்ச்சி அடையும் முகத்தில் வசீகரம் கூடும் , இரத்த அழுத்தம் குறையும் , வயிற்று பகுதியில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும் , மனம் அமைதி அடையும், நுரையீரல் பலப்படும்..
வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரித்து முகத்தில் சந்தோசத்தையும் மனதில் அமைதியை குடுக்கும் “சிரிபிரானாயாமம்”:
919
previous post