Home ஆன்மீக செய்திகள் தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும்

தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும்

by Sarva Mangalam

கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டில் பீடை அகலும். துன்பங்கள் அகலும்.

மேற்கு திசையில் தீபம் ஏற்றி வைத்தால் சனி தோஷம், கிரகதோஷம், சல்லிய தோஷம், பங்காளிப்பகை, கடன் தொல்லை ஆகியவை தீரும்.

வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வைத்தால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும். செல்வம் உண்டாகும்.

தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது. இது அசுப காரியங்களுக்கு மட்டுமே. தெற்குப் பார்த்த வீட்டில் குடியிருப்பவர்கள் காலை, மாலை வீட்டின் முன் விளக்கேற்றி வைக்கும்போது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும்
.
எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை பார்க்க ஏற்றி வைக்கக் கூடாது.

ஒரு முகம் ஏற்றி வைத்தால் மத்திம பலன் கிடைக்கும்.
இரண்டு முகங்கள் ஏற்றி வைத்தால் குடும்ப ஒற்றுமை உண்டாகும். மூன்று முகங்கள் ஏற்றி வைத்தால் புத்திரனால் சுகம் பெறலாம்.
நான்கு முகங்கள் ஏற்றி வைத்தால் பசு போன்ற செல்வம் தரும்.
ஐந்து முகங்கள் ஏற்றி வைத்தால் செல்வத்தைப் பெருக்கும்.

ஒரு முகம் ஏற்றினால் கிழக்குப் பார்த்து விளக்கினை வைக்கவும்

You may also like

Translate »