Home ஆன்மீக செய்திகள் திருவிளக்கின் முக்கியத்துவம்.

திருவிளக்கின் முக்கியத்துவம்.

by Sarva Mangalam

* ஏக முகம்: பிணி நீக்கும்.

* துவி முகம்: குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

* த்ரி முகம்: சகோதர பிணக்குகள் நீங்க, நல்லுறவுகள் பலப்பட.

*சதுர்முகம்: வியாபாரம் வளர, மேல்நாடு செல்ல.

*பஞ்ச முகம்: பூர்வஜென்ம புண்ணியம் ஏற்பட, மாத்ரு-பித்ரு தோஷங்கள் விலக, பூர்வ ஜென்ம பாவங்கள் விலக.

*சன் முகம்: ரோகம், சத்ரு கடன் தீர.

*சப்த முகம்: திருமணம் நடை பெற, இல்லறம் நல்லறமாக.

*அஷ்ட முகம்: மரணபயம், விபத்துக்கள் அகல, வழக்குகள் வெற்றிபெற.

*நவ விளக்கு: குடும்ப ஷேமம், புத்திர பௌத்திராதிஷமம், மகிழ்ச்சி.

*தச முகம் : தொழில், உத்தியோகம், பதவி, புகழ் கிட்ட.

*ஏக தசை முகம் : லாபங்கள் கூட, பணம் சேர,
சொத்துக்கள் வாங்க

*துவாச முகம்: நஷ்டங்கள் அகல, எதிர்ப்பு- இடைஞ்சல் விலக, பகை நீங்க.

*சோடஷ முகம் (16 முகம்): கோயில்களில் மட்டுமே ஏற்றுவர்.

திருவிளக்குத் துளிகள்:

* வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.

* திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.

* விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.

* வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும்.

* அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம்.
திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.

You may also like

Translate »