நாம் எந்த திசையில் அமர்ந்து உணவை உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நமது ஆரோக்கியம் இருக்கிறது என சாஸ்திரம் கூறுகிறது.
எந்தத் திசையில் அமர்ந்து உண்டாலாம்?
கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும், ஆயுள் விருத்தியாகும். ( இந்திரனுக்கு உரியது)
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும்.(செல்வத்தின் அதிபதியாகிய மகாலட்சுமிக்குரியது )
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படும் நிலை உண்டாகும். (சிவனுக்குரியது)
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டு வந்தால் அழியாப் புகழ் உண்டாகும்.(எமனுக்குரியது)
ஒருவர் தங்களது வீட்டை தவிர்த்து உறவினர்கள் வீட்டிற்குச் சென்றால் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அந்த உறவு பகையாகிவிடும் என்பது சாஸ்திரம் கூறுகிறது.