Home ஆன்மீக செய்திகள் கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

by Sarva Mangalam

தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச் சார்ந்தவர்களையும் இறைவனது
பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இறைவனின் பிரசாதத்தை
அங்கேயே விட்டுவிடுவது என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு
சமம்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கோயிலுக்கு வந்திருக்கிறோம்,

எல்லோரும் விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாகிவிட்டது

அல்லது வீட்டில் யாருமில்லை என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது.

ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துவந்து

பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில் இட்டுக் கொள்வதுதான் நல்லது.

You may also like

Translate »