Home ஆன்மீக செய்திகள் பைரவ கணமாக ஒரு சுலபமான வழிபாட்டுமுறை

பைரவ கணமாக ஒரு சுலபமான வழிபாட்டுமுறை

by Sarva Mangalam


இந்த பிறவியிலேயே பைரவப் பெருமானின் அருளைப் பெற நீங்கள் விரும்பினால் ஒரே ஒரு வழிமுறையைப் பின்பற்றினாலே போதுமானது;அது:-

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்கைவிட்டுவிட வேண்டும்;மது அருந்துவதையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்;தமிழ்ப்பண்பாட்டை விடாப்பிடியாகப் பின்பற்ற வேண்டும்.இந்த தினசரிக் கொள்கைகளோடு மாதம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நோட்டில் எழுதி வர வேண்டும்.இன்று முதல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எழுதி வந்தாலே போதுமானது.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை பின்வரும் விதமாகவே எழுத வேண்டும்.
ஓம்(உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும்
ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று 108 முறையும்
ஓம் அண்ணாமலையே போற்றி என்று ஒருமுறையும் எழுதி முடிக்க வேண்டும்.இப்படி எழுதுவதை நமது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கலாம்;ஆனால்,வெளிவட்டார நட்புக்களிடம் ஒருபோதும் காட்டக் கூடாது;

தினமும் இந்த 108முறை எழுத ஆரம்பித்தால்,எக்காரணம் கொண்டும் எழுதி முடிக்கும் வரை வேறு வேலையில் கவனம் சிதறக் கூடாது.செல்போன் பேசக் கூடாது.டிவி பார்த்துக் கொண்டே எழுதக் கூடாது;ரேடியோ கேட்டுக்கொண்டே எழுதக் கூடாது.ஒரு நாளில் உங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் எழுதலாம்;

18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்த மந்திரத்தை எழுத வேண்டும்.அதை விடக் குறைந்தவர்கள் எழுதக் கூடாது.ஒருபோதும் சிகப்பு,கறுப்பு நிறப்பேனாக்களால் எழுதக் கூடாது;நீல நிறப் பேனாவால் மட்டுமே எழுத வேண்டும்.பூஜை அறையில் அமர்ந்து எழுத வேண்டும்.
அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் தினமும் இந்த 108 ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுத சிறந்த நேரம் ஆகும்.

தீட்டு வீடுகளுக்குச் சென்று கலந்து கொண்டால் ஒன்பது நாட்கள் வரை எழுதக் கூடாது.பத்தாவது நாளில் இருந்து எழுதத் துவங்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை எழுதிக்கொண்டே வந்தால்,நமக்கு நமது பிறவி சுபாவத்திற்கேற்றவிதமான ஆன்மீக குரு கிடைப்பார்;(பழமொழி:சீடன் தயாராக இருக்கும் போது குரு தோன்றுவார்).அதன் பிறகு,நமது வாழ்க்கையில் துரோகம்,ஏமாற்றம்,பண நெருக்கடி,குடும்பக் குழப்பம் என்று எதுவும் ஏற்படாது;நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகிவிடும்;கர்மவினைகளும் கரையத் துவங்கும்;

ஐந்து ஆண்டுகள் வரை தினமும் எழுதிக்கொண்டே வந்தால்,நம்மைச் சுற்றியிருக்கும் சூட்சும உலகத்தோடு தொடர்பு உண்டாகும்; நமது பிறவிகுணத்தில் இருக்கும் தீய குணங்கள் மறைந்துவிடும்;நமது மனநிலை,உடல் நிலை முழுக்க முழுக்க மென்மையும்,ஆன்மீகச் சூழ்நிலைக்கு ஏற்றவிதமாக உருமாறிவிடும்;நிச்சயமாக அட்ட வீரட்டானங்களுக்கு உங்களின் ஆன்மீக குருவோடு பயணிக்கும் சந்தர்ப்பம் அமையும்;அட்டவீரட்டானங்களுக்குப் போய்த் திரும்பியப் பின்னர் என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் இது வரை எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்துள்ளீர்கள்?

எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன தவறுகள் செய்தீர்கள்?

அந்தத் தவறுகளால் இப்பிறவியில் என்னென்ன விதமான கஷ்டங்கள்,அவமானங்கள்,வேதனைகளை அனுபவிக்கிறீர்கள்?

அனுபவிக்கப் போகிறீர்கள்? என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள்?

எந்தெந்த மனிதப் பிறவிகளில் என்னென்ன புண்ணியம் செய்தீர்கள்?

அந்த புண்ணியங்களால் இப்பிறவியில் உங்களுக்கு கிடைத்திருக்கும் சொத்துக்கள்,திறமைகள்,அதிர்ஷடங்கள் என்னென்ன? இனிமேல் என்னென்ன கிடைக்க இருக்கிறது? என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.

எதனால் இந்த அதிசயம் நிகழும் தெரியுமா? நீங்கள் தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ எழுதுவதன் மூலமாக காலத்தை இயக்கும் கடவுளான காலபைரவப் பெருமானைச் சரணடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

30 ஆண்டுகள் வரை தினமும் 108 முறை எழுதிவிட்டீர்கள் எனில் நிச்சயமாக நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள்இன்னும் ஏராளமான ஆச்சரியங்களை இந்தப் பிறவியிலேயே காண்பீர்கள்;அவைகளை இங்கே பகிரங்கப்படுத்த முடியாது.ஐந்தாம் ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு மனக்குறை என்று எதுவுமே இராது.ஆரம்பிப்போமா?

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

You may also like

Translate »