Home ஆன்மீக செய்திகள் பைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை

பைரவ அருளைப் பெறும் எளிய வழிமுறை

by Sarva Mangalam

எந்த வழிபாடு செய்தாலும்,வழிபாட்டின் முக்கிய அம்சமே நமது மனதிற்குள் உருவாகும் நம்பிக்கையே! ஒரு பழமையான சிவாலயம் சென்று வழிபடும் போது நமது நம்பிக்கையே அங்கே இருக்கும் தெய்வ சக்திகளால் கவனிக்கப்படுகிறது.நம்பிக்கையில்லாமல் கடனே என்று வழிபட்டால் நமது கோரிக்கைகள் இறை சக்தியால் கவனிக்கப்படுவதில்லை;

ஒரு சாலையோர விநாயகர் கோவிலுக்கு தினமும் மனப்பூர்வமான நம்பிக்கையோடு சென்று நமது கோரிக்கையை வைத்தால் நிச்சயம் நமது நம்பிக்கை நிஜமாகும்.

நமது நம்பிக்கையை எப்படி மனதிற்குள் உருவகப்படுத்த வேண்டும் தெரியுமா?

எது நம்முடைய லட்சியமோ அதை அடைந்துவிட்டதாக நாம் திரைப்படம் போல கற்பனை செய்ய வேண்டும்.அவ்வாறு ஒவ்வொரு நாளும் நினைக்கும் போது அந்த லட்சியம் நிறைவேறியதற்காக நாம் இப்போது வழிபடும் தெய்வத்திற்கு நன்றியும் கூறும் விதமாக சிந்திக்க வேண்டும்.இதைத்தான் மனோதத்துவ டெக்னிக்குகளில் Creative Visuvalization என்று கூறுகிறார்கள்.இப்படி தினமும் அந்த சாலையோர விநாயகர் கோவிலில் வழிபடும் போது(சாமி கும்பிடும்போது) திரைப்படம் போல நினைக்கும் போது ஒரு சில நாட்களில் நமது ஆழ்மனம் விழிக்கும்;அப்படி விழிக்கும் போது நமது ‘லட்சியம் நிறைவேறும் விதமான நமது கற்பனைத் திரைப்படம்’ நமது ஆழ்மனதிற்குள் பதிந்துவிடும்;அப்படி ஒரே ஒருமுறை பதிந்துவிட்டாலே அடுத்த சில நாட்கள்/வாரங்களில் நமது லட்சியம் நிஜமாகத் துவங்கும்.

எப்போதும் ஒரு தெய்வத்தை தினமும் வழிபாடு செய்யும் போது ஒரே ஒரு கோரிக்கையோடு மட்டுமே வழிபட வேண்டும்.அது நிறைவேறிய பின்னரே அடுத்த கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்.

ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது இப்படி கற்பனை செய்ய வேண்டியதில்லை;ஏனெனில்,தொடர்ந்து நீங்கள் ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்;உங்கள் தலைவிதியை நீங்களே மாற்றிடக் காரணமாக இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.மேலும்,ஸ்ரீகால பைரவப் பெருமானைத்தவிர,வேறு எந்த தெய்வத்தை வழிபடச் சென்றாலும் நமது ஒரே ஒரு கோரிக்கையை திரும்பத் திரும்ப நினைத்து வேண்டிக்கொண்டே இருந்தால் தான் அது நிறைவேறும்.

ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபடச் செல்லும் போது எந்த கோரிக்கையும் இல்லாமல் திறந்த மனதுடன் போனாலே போதும்.இதுவும் சரணாகதி தத்துவத்தின் ஒரு அங்கமே!

நம்மை படைத்தவருக்குத் தெரியாதா? எதை நமக்கு முதலில் தர வேண்டும்; எதை நமக்கு இறுதியில் தர வேண்டும் என்று!!

நம்மைப் படைத்தவர் பிரம்மாதான்.அதே பிரம்மாதான் நாம் இப்பிறவியில் இந்த ஆத்மா ஸ்ரீகாலபைரவப் பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்து தனது காலத்தையே மாற்றிடப் பிறந்திருக்கிறது என்றும் நமது தலையெழுத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார்

You may also like

Translate »