Home ஆன்மீக செய்திகள் ஏன் வில்வம் புனிதமானது ?

ஏன் வில்வம் புனிதமானது ?

by Sarva Mangalam

ஏன், ஒரு இலை மற்றொன்றை விட புனிதமாக இருக்கிறது?

இது ஒருவித பாரபட்சமா?

அப்படி பார்த்தால், எல்லாமே மண்ணிலிருந்து தான் வருகிறது. வேப்பம் பழமும், மாம்பழமும் ஒரே மண்ணிலிருந்து வந்தாலும், சுவை வெவ்வேறாக இருக்கிறது அல்லவா?

ஒரு குறிப்பிட்ட உயிர், ஒரு மண்ணை கையாளும் வழிமுறையும், இன்னொரு உயிர் அதே மண்ணை கையாளும் வழிமுறையும் வெவ்வேறாக இருக்கின்றன.

ஒரு புழுவிற்கும், பூச்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன? உங்களுக்கும், மற்றொரு மனிதருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

எல்லாமே ஒன்று தான், ஆனால் நாம் அவற்றிலிருந்து புரிந்து கொள்வது வேறுபடுகிறது.

ஆன்மீகத்தில் இருக்கும்போது…

மக்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, அவர்கள் ஒவ்வொரு வழியிலும் உதவியை எதிர்பார்க்கிறார்கள், ஏனென்றால் இது யாரும் அறியாத பாதை.

இந்திய கலாச்சாரத்தில், நமக்கு உதவியாக இருக்கும் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும், கூர்ந்து கவனித்தும், தியான நிலையில் இருந்தும் கண்டு பிடித்துள்ளார்கள்.

அவர்கள் பூக்களையும், பழங்களையும், இலைகளையும் கூட விட்டுவைக்கவில்லை.

ஏன் வில்வம் புனிதமானது?

ஏன் குறிப்பாக வில்வம் புனிதமாகக் கருதப்படுகிறது?

எப்போதுமே வில்வம், சிவனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்வார்கள். அவர் ஒன்றும் அப்படி கருதவில்லை.

அது சிவனுக்கு நெருக்கம் என்று சொல்லமுடியாது. அது சிவனுக்கு நெருக்கம் என்று நாம் ஏன் நினைக்கிறோம் என்றால், அந்த வில்வத்தினுடைய அதிர்வுகள் நாம் சிவன் என்று கருதுவதுடன் இருக்கும் அதிர்வுகளுடன், பெருமளவிற்கு நெருக்கமாக இருக்கிறது.

வில்வத்தின் அதிர்வுகள்

இது மாதிரி நாம் நிறைய பொருட்களை கண்டுபிடித்து வைத்துள்ளோம். நாம் அவற்றை தான் அர்ப்பணம் செய்கிறோம்.

ஏனென்றால் அதன் மூலமாகத் தான் நாம், தெய்வீகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

நீங்கள் வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிக்கும் போது, அதனை அவரிடம் விட்டு செல்வதில்லை. அதனை சிவனுக்கு அர்ப்பணம் செய்தபின், உங்களுடன் எடுத்து செல்கிறீர்கள்.

ஏனென்றால் வில்வத்திற்கு அந்த அதிர்வுகளைத் தக்க வைத்துக்கொள்ள கூடிய சக்தி, பெருமளவில் இருக்கிறது.

நீங்கள் அதை லிங்கத்தின் மேல் வைத்து எடுத்தால், லிங்கத்தின் சக்தி அதிர்வுகள் நீண்டநேரம் அதில் இருக்கும். அதனை உங்களிடமே தக்க வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் இதை செய்து பார்க்கலாம்

ஒரு வில்வ இலையை அர்ப்பணம் செய்து, உங்கள் சட்டை பையில் உங்களுக்கு மிக அருகில் அதை வைத்துக்கொண்டு நடந்து பாருங்கள். உங்களுக்கு, அது உடலளவிலும், மனதளவிலும், ஆரோக்கியத்திலும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதே மாதிரி பல பொருட்களை மக்கள் புனிதமாகக் கருதி உபயோகப்படுத்தி வருகிறார்கள். இது கடவுளைப் பற்றியது அல்ல.

இது உங்களைப் பற்றியதும், நீங்கள் ஏதோ ஒன்றை அடையும் திறன் பற்றியதும் ஆகும்.

வீடுகளில் வில்வ மரம்

நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் எமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வர்ச்சினை மூலம் சிவனின் திருவருட் கடாச்சத்தைப் பெறமுடியும்.

வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவரிற்கு ஒருபோதும் நரகமில்லை.

ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமன்.

வில்வம் பழந்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

You may also like

Translate »