Home ஆன்மீக செய்திகள் உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி:

உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி:

by Sarva Mangalam

கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.
பசுவுக்கு வெள்ளி கிழமை அன்று அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப்பிரச்னைகள் படி படியாக தீர்ந்துவிடும்.பசுவை இன்று கிராமங்களில் பார்க்கலாம்.அல்லது பால் பண்ணைகள்,மாட்டுப் பண்ணைகள்,பசு மடங்கள்,பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக்கீரையை வழங்கலாம்.அல்லது வாழைப்பழங்களையும் தானமாக வழங்கலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளேயே உட்பிரகாரத்தில் பசுமடம் அமைந்திருக்கிறது.அந்த பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரைக் கட்டு ஒன்று ரூ.10/-க்கு விற்பனை செய்கிறார்கள்.நாம் அதை வாங்கி உள்ளே இருக்கும் பசுக்களுக்கு வழங்குவது மாபெரும் புண்ணியம்.
.சாதாரணமாக நமது ஊரில் தெருவில் இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்கினாலே செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். இதைவிட பழமையான கோயில்களில் செய்தால் மிக மிக சிறப்பு!!!

You may also like

Translate »