Home ஆன்மீக செய்திகள் ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?

ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?

by Sarva Mangalam

எதுகை, மோனையுடன் நம்மவர்கள் நிறைய சொற்றொடர்களைப் புதிது, புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும், ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தால் நாய் படாத பாடு பட வேண்டும்,சித்திரையில் பொறந்தா பெத்தவனுக்கு ஆகாது, ஆனியில பொறந்தா கூனிப் போகும், ஐப்பசியில பொறந்தா பசியில வாடும், மாசியில வயசுக்கு வந்தா வேசியாப் போவா, என முட்டாள்தனமான, மூட நம்பிக்கையை வளர்க்கின்ற பல சொற்றொடர்கள் இங்கு உலா வருகின்றன. இந்த மாதிரியான சொல் வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவை முற்றிலும் பொய்யானவை.
ஒரு சில பித்தலாட்டக்காரர்கள் பரிகாரம் செய்து பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. இது போன்ற ஏடாகூடமான கருத்துகளில் கவனத்தைச் செலுத்தாதீர்கள். எந்த மாதத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரஹ நிலையின்படியே வாழ்க்கை அமையும் என்பதுதான் உண்மை.

You may also like

Translate »