உண்ணாமலை உடனமர் அண்ணாமலையாரை திருக்கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலை கிரிவலம் வருவது யாவரும் அறிந்த ஒன்றே அப்படிப்பட்ட பழமையும் பெருமையும் கொண்ட திருவண்ணாமலை (thiruvannamalai) கிரிவலப்பாதை 16 கி.மீட்டர்கள் கொண்டது. மலையே சிவனாக உருவகம் கொண்ட காரணத்தால் திருவண்ணாமலையில் செருப்பு போட்டுக்கொள்ளாத ஆன்மீக அன்பர்கள் ஏராளம் .
பழங்காலத்தில் திருவண்ணாமலையை(THIRUVANNAMALAI) கிரிவலத்தை ஐந்து முறை வலம் வந்தார்களாம் (80கி.மீ) அப்படி வலம் வந்தால் மறுபிறவியற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
பொதுவாக திருவண்ணாமலையை கிரிவலம் செல்ல இரவு ஏழு மணிக்கு மேல் சுற்ற ஆரம்பிக்கும் போதுதான் சந்திரபகவானின் 16 கலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்கள் மலையின் மீது பட்டு கிரிவலம் செல்பவர் மீது பட்டு மனதைரியத்தை உண்டாக்கும் .
திருவண்ணாமலையை கிரிவலம் செல்லும்போது ஓம் சிவாய நம, நமச்சிவாய போற்றி ,சிவஷோஷ்த்திரங்கள்,சிவன் பாடல்கள் ,சிவன் பதிகங்கள் ,கேட்பது பாடுவது ,பாராயணம் செய்வது சிறப்பு, சிவனும் அம்பாளும் , சித்தர்களும் மகான்களும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் நன்நாளாக தீபத்திருநாள் அமைவதால் கிரிவலம் வரும் பக்தர்கள் உரக்க பேசாமலும் ,யாருக்கும் இடையூறு செய்யாமலும் அமைதியாக “சிவாய நமஹ” என்று சொல்லி கிரிவலம் செல்ல நாம் கிரிவலம் செல்வதன் உண்மையான பலன் ஏற்படும் .
திருவண்ணாமலையை( thiruvannamalai) கிரிவலம் செல்லும் போது ஒருவர் இறந்துவிட்டால் அவர் உயிர் நேரே கயிலாயத்திற்கு செல்லும். அப்படிச்செல்லும் போது சந்திரன் வெள்ளைக் குடைபிடிப்பார் என்றும் ,சூரியன் கையில் விளக்கேற்றி வருவார் இந்திரன் மலர் தூவுவார் ,குபேரன் பணிந்து வரவேற்பார் என்று அருணாசலீஸ்வரர் ஸ்தல புராணம் இயம்புகிறது.
திருவண்ணாமலையை கிரிவலம் செய்யும் கிழமைகளின் பலன்கள் :
ஞாயிறுக்கிழமே – சிவபதம்
திங்கள் கிழமை உலகாளும் வல்லமைகிட்டும்
செவ்வாய்கிழமை – கடன் ,ஏழ்மைகள் விலகி பிறவிப் பிணியில்
இருந்து விடுதலை கிட்டும்
புதன் – கலைகளில் தேர்ச்சி
வியாழக்கிழமை- ஞானிகளுக்கு ஒப்பான நிலை கிட்டும்
வெள்ளிக்கிழமை – விஷ்ணுபதம் கிட்டும்
சனிக்கிழமை – நவகிரகங்களை வழிபட்டதன் பலன் கிடைக்கும் .
தீபத் திருவிழா திருவண்ணாமலையில் பத்து நாட்களுக்கு நடைபெறும் .2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.7 அடி உயரமுடைய செப்புக்கொப்பரையில் 3000 கிலோ நெய் கொண்டு ஆயிரம் மீட்டர் காடா துணியால் 10நாட்களுக்கு தொடர்ந்து கார்த்திகை தீபம் எரிந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும் .
மலையே சிவனாக ,நினைத்தாலே முக்தி தருகின்ற அரிய சிறப்புகளை உடைய சிவபெருமானை கிரிவலம் வந்து கார்த்திகை தீபத்தையும் தரிசித்து எல்லா நலமும் வளமும் பெறுங்கள் .
ஓம் சிவாய நமஹ