“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கு…ம் காண முடியும்.
கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.
சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை “ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்” என்பர்.
இதனையே திருமூலரும்…
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே”
என்று கூறுகிறார்.
எளிமையாய் விளக்குவதானால்
பாதங்கள் – முன்கோபுரம்
முழங்கால் – ஆஸ்தான மண்டபம்
துடை – நிருத்த மண்டபம்.
தொப்புள் – பலி பீடம்
மார்பு – மகாமண்டபம் ( நடராஜர்)
கழுத்து – அர்த்த மண்டபம் (நந்தி)
சிரம் – கர்ப்பகிரகம்
வலது செவி – தக்ஷிணா மூர்த்தி
இடது செவி – சண்டேஸ்வரர்.
வாய் – ஸ்நபன மண்டப வாசல்
மூக்கு – ஸ்நபன மண்டபம்
புருவ மத்தி – லிங்கம்.
தலை உச்சி – விமானம்.
sarvamangalam.info
“தேஹா தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸனாதன: