Home ஆன்மீக செய்திகள் ராமாயணத்தில் … இவர்கள் யார்?

ராமாயணத்தில் … இவர்கள் யார்?

by Sarva Mangalam


1. அகல்யை – ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.
2. அகத்தியர் – ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.
3. அகம்பனன் – ராவணனிடம் ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்
4. அங்கதன் – வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.
5. அத்திரி – அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.
6. இந்திரஜித் – ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.
7. கரன், தூஷணன் – ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.
8. கபந்தன் – தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்
9. குகன் – வேடர் தலைவன், படகோட்டி
10. கும்பகர்ணன் – ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.
11. கும்பன் – கும்பகர்ணனின் மகன்
12. குசத்வஜன் – ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.
13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை – தசரதரின் பட்டத்தரசியர்
14. சுநைனா – ஜனகரின் மனைவி, சீதையின் தாய்
15. கவுதமர் – அகல்யையின் கணவர், முனிவர்
16. சதானந்தர் – அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
17. சம்பராசுரன் – இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.
18. சபரி – மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்
19. சதபலி – வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
20. சம்பாதி – கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.
21. சீதா – ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.
22. சுமந்திரர் – தசரதரின் மந்திரி, தேரோட்டி
23. சுக்ரீவன் – கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.
24. சுஷேணன் – வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.
25. சூர்ப்பணகை – ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.
26. தசரதர் – ராமனின் தந்தை
27. ததிமுகன் – சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்
28. தாடகை – காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.
29. தாரை – வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.
30. தான்யமாலினி – ராவணனின் இளைய மனைவி
31. திரிசடை – அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.
32. திரிசிரஸ் – ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.
33. நளன் – பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்
34. நாரதர் – பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.
35. நிகும்பன் – கும்பகர்ணனின் மகன்
36. நீலன் – வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்
37. பரசுராமர் – விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்
38. பரத்வாஜர் – பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்
39. பரதன் – கைகேயியின் மகன், ராமனின் தம்பி.
40. மந்தரை – கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.
41. மதங்கர் – தவ முனிவர்
42. மண்டோதரி – தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
43. மாரீசன், சுபாகு – தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.
44. மால்யவான் – ராவணனின் தாய்வழிப்பாட்டன்.
45. மாதலி – இந்திரனின் தேரோட்டி
46. யுதாஜித் – கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்
47. ராவணன் – மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.
48. ராமன் – ராமாயண கதாநாயகன்
49. ரிஷ்யசிருங்கர் – புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.
50. ருமை – சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.
51. லங்காதேவி – இலங்கையின் காவல் தெய்வம்
52. வசிஷ்டர் – தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.
53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி – தசரதரின் மற்ற குருமார்கள்
54. வருணன் (சமுத்திரராஜன்) – கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்
55. வால்மீகி – ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.
56. வாலி – இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.
57. விஸ்வாமித்ரர் – ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா – ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.
58. விராதன் – தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.
59. விபீஷணன் – ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.
60. வினதன் – கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.
61. ஜடாயு – கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.
62. ஜனகர் – சீதை, ஊர்மிளாவின் தந்தை.
63. ஊர்மிளா – லட்சுமணனின் மனைவி.
64. ஜாம்பவான் – கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்
65. அனுமான் – அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.
66. ஸ்வயம்பிரபை – குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.
67. மாண்டவி – பரதனின் மனைவி.
68. சுருதகீர்த்தி – சத்ருக்கனனின் மனைவி………..

You may also like

Translate »