கணவன் மனைவி ஏதோ ஒரு அல்லது பல காரணங்களால் பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் இரண்டு குடும்பங்கள் பிரிகின்றன.அம்மா அப்பாவின் இணைப்பு இல்லாமல் வாழும் குழந்தைகள் மூர்க்கத்தனமாக வளருகின்றன.இதன்மூலம் நாம் மூர்க்கத்தனமும் ரவுடித்தனமும் நிறைந்த சமுதாயத்தை வளர்க்கிறோம்.இப்படி ஆகாமல் இருக்க, பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர ஒரு பரிகாரம் இருக்கின்றது.இதை மனைவிதான் செய்ய வேண்டும்.அதாவது பிரிந்து வாழும் மனைவிதான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும்.அவரது சார்பாக வேறு எவரும் செய்யக்கூடாது.
தட்டு ஒன்றில் குங்குமத்தைப் பரப்பி, அதில் தன் கணவரின் பெயரை எழுதி கீழ்க்காணும் சுலோகத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும்.
த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு
ஜபம் முடிந்ததும் அந்த தட்டை பூஜிக்க வேண்டும்.
அதாவது தீபாராதனை செய்ய வேண்டும்.பிறகு அந்தகுங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்.(பூஜைக்கு முன்பு எப்போதும் போல் குங்குமம் இட்டுக் கொள்ளலாம்)
மறுநாள், இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்).
சக்தி வாய்ந்த இந்த சுலோகத்தை ஜபித்துவர பலன் நிச்சயம் என்பது அனுபவ உண்மை!!!