( தினமும் சாப்பிடும் முன்பு காகத்திற்கு சாதம் வைக்கும் முன்பு பூஜையறையில் வைத்து சொல்ல வேண்டிய பலி மந்த்ர ஸ்லோகம் ) :
பெருமாள் பக்தர்கள் சொல்ல வேண்டியது :
பலிர் விபீஷணே பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜூன
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா.
என்று ப்ரார்த்தனை செய்து சாதம் வைக்க வேண்டும்
இதை சொல்ல முடியாதவர்கள்
மகாபலி விபீஷணர் பீஷ்மர் கபிலர் நாரதர் அர்ஜூனர் முதலான விஷ்ணு பக்தர்கள் இந்த மஹாவிஷ்ணு ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லி சாதம் வைக்கவும்.
சிவ பக்தர்கள் சொல்ல வேண்டியது :
பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவ
என்று ப்ரார்த்தனை செய்து சாதம் வைக்கவும்.
இதை சொல்ல முடியாதவர்கள்
பாணாசுரன் ராவணன் சண்டிகேஸ்வரர் நந்திகேஸ்வரர் ப்ருங்கி முனிவர் முதலான சிவ பக்தர்கள் இந்த மகாதேவ ப்ரசாதத்தை ஏற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லி சாதம் வைக்கவும்.