கீழே உள்ள யந்திரத்தை உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்லநாளில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து
சிகப்பு மையால் எழுதவும்.பின்,அதற்கு பஞ்சோபசார பூஜை செய்யவும்.
பஞ்சோபசார பூஜை முறை :-
1.யந்திரத்திற்குச் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
2.யந்திரத்திற்குச் செந்தாமரை இதழ்கள் அல்லது மல்லிகை அல்லது பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்யவும்..
3.ஊதுவத்தி காண்பிக்கவும்.
4.கற்பூரம் காண்பிக்கவும்.
5.வெற்றிலை பாக்கு,பழம்,கற்கண்டு,தேங்காய் ,பால் நைவேத்யம் செய்யவும்.
பின்னர் யந்திரத்தை லேமினேட் செய்து கல்லாவில் வைத்துக்கொள்ளவும். பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ் பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ளப் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக வந்து கொண்டே இருக்கும்.