Home ஆன்மீக செய்திகள் பகையை வெல்ல சக்தி அருளும் ஸ்ரீராம ஜெயம்

பகையை வெல்ல சக்தி அருளும் ஸ்ரீராம ஜெயம்

by Sarva Mangalam

அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும் மந்திரமாக ஸ்ரீராம ஜெயம் விளங்குகிறது.

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதி வேண்டுதல்களுக்காக இவ்வாறு எழுதப்படுகிறது.

‘ராம’ என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘மரா’ என்றே முதலில் உச்சரித்தார். ‘மரா’ என்றாலும், ‘ராம’ என்றாலும் ‘பாவங்களைப் போக்கடிப்பது’ என்று பொருள்.

ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ‘ரமா’ என்று அவளுக்கு பெயருண்டு. ‘ரமா’ என்றால் ‘லட்சுமி’. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் உண்டாகும்

You may also like

Translate »