மந்திரம்:-
நவக்கிரஹங்களும் தெய்வங்களும் நாம் இந்த ஜன்மத்தில் கொண்டு வந்த வினைகளை (பிராரப்த கர்மா ) அனுபவிக்க சூழ்நிலையையும், எண்ணங்களையும் உண்டாக்குகின்றனர்.எனவே,நவக்கிரகங்களை, தெய்வங்களை பழிப்பது கூடாது. இருப்பினும்,அவர்களை வழிபட்டால் நன்மைகளை நிறைவாகவும்,தீமைகளின் கெடுபலன்களை குறைத்தும் அருள்செய்வார்கள்.
தற்சமயம் எந்த கிரகத்தின் தசா புத்தி நடைபெற்று வருகிறதோ அதற்கான மந்திரத்தை ஜெபித்து வரலாம்.மேலும,அவற்றிற்கான கூடுதல் பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.சூர்யபகவான் :-
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||
வேலையில்,அரசியலில்,உடல்நலத்தில் குறிப்பாகத் தலை தொடர்பான வியாதிகளை தீர்க்கும். தந்தைகள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தகப்பன் ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சூர்யன் அருள்வார்.
2.சந்திரபகவான் :-
ஓம் ஸ்ராம் ஸ்ரீம் ஸ்ரௌம் சஹ சந்திராய நமஹ|
மனக்குழப்பம்,வேதனைகள்,வயிறு,மற்றும் இரத்தம் தொடர்பான வியாதிகள் நீங்கும்.தாய்மார்கள் இம்மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தங்கள் கடமைகளை செவ்வனே செய்ய தாய் ஸ்தானத்துக்கு அதிபதி கிரகமான சந்திரன் அருள்வார்.
3.செவ்வாய்பகவான்:-
ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ|
கணவன்,மனைவி உறவு மேம்படும்.வாகனங்கள் ,வீடு,சொத்து வாங்க மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் தீரும்.விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும்.
4.குருபகவான்:-
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ ப்ரஹஸ்பதயே நமஹ||
வாழ்வில் எடுத்த காரியங்களில் வெற்றியும்,பாதுகாப்பும் ஏற்படும்.சமூகத்தில் மதிப்பும்,மரியாதையும் ஏற்படும்.தொழில்,வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.
5.சனிபகவான்:-
ஓம் க்ஹ்ராம் க்ஹ்ரீம் க்ஹ்ரௌம் சஹ சனீஸ்வராய நமஹ|
காரியத்தடை,கடன்,வறுமை,அவமானம்,வியாதிகள் நீங்கும்.
6.புதபகவான்:-
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ|
புத்திக்கூர்மை,கலைகளில் தேர்ச்சி உண்டாகும்.தொழில் வெற்றி,வாக்குவன்மை உண்டாகும்.
7.சுக்ரபகவான்:-
ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ சுக்ராய நமஹ|
பொன்,பொருள் சேர்க்கை,கலைகளில் சிறப்புத்தேர்ச்சி,பெண்களுடன் சிறப்பான தொடர்புகொள்ளும் திறன் உண்டாகும்.
8.ராகுபகவான் :-
ஓம் ப்ஹ்ராம் ப்ஹ்ரீம் ப்ஹ்ரௌம் சஹ ராகவே நமஹ|
மனக்குழப்பம்,தீய சக்திகளால் தொல்லை,சட்டப்பபிரச்சனைகள் தீரும்.
9.கேதுபகவான் :-
ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ கேதவே நமஹ|
இழந்த புகழை மீண்டும் பெறலாம்.தீய ஆவிகளின் தொல்லை ,ஏவல் தீரும்.
ஒவ்வாமை தொடர்பான வியாதிகள் நீங்கும்.திடீர் தீய நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பு கிட்டும்.
வாழ்க வையகம்| வாழ்க வளமுடன்|