Home ஆன்மீக செய்திகள் காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

by Sarva Mangalam

 

 

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம்.

காலையில் கண் விழித்ததும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங் கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.

கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்

நம் ஒவ்வொரு செயலிலும் பக்கபலமாக இருந்து, நம்மையும் நம் இல்லத்தையும் சிறக்கவும் செழிக்கவும் செய்வாள் தேவி!

You may also like

Translate »