2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே
உடல்கட்டு.
************
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
சிவ மகாமந்திரம் … முயன்று பாருங்கள்
***********************************************
“ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்”
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.
இதை நீக்க சிவ மந்திரத்தை நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் நாம் – அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்தபாவங்கள் உடனே நீங்கிவிடும்.
ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .
“நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.
அனுமாரின் வசியக் கட்டு மந்திரம் .
*************************************
“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா,
லங்காபுரி ராவண சம்ஹாரா,
சஞ்சீவி ராயா ஓடிவா, உக்கிரமாக ஓடிவா,
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு
ஓம்ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா”
திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார்அகத்தியர்.
சகலத்திர்கும் கட்டு மந்திரம் …
*****************************
“ஓம் பஹவதி ப்ய்ரவி
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம”
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”
இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன்.
சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..
********************************************
“உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்”
– அகத்தியர் –
முதலில் சூரியன் உடல் கட்டு தீர “அம் ஹீம்”
என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
******************************************
“ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்”
– அகத்தியர் –
ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர “ஹீம் உறீம்”
என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல்
கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.
செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..
*******************************************
“நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே”
– அகத்தியர் –
நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர “ஸ்ரீம்
றீங் நசி மசி” என்று லட்சம் உரு செபித்தால்
செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.
புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..
************************************
“என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்”
– அகத்தியர் –
புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு
சந்தோசமாக “வங் யங் நசி மசி” ன்று லட்சம்
உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.
குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..
*************************************
“நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்”
– அகத்தியர் –
நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும்
மந்திரத்தை கேளு “ஸ்ரீம் றீம் நசி மசி” என்று
அன்பாக லட்சம் உரு செபித்தால்
குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.
சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..
****************************************
“இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே”
– அகத்தியர் –
சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு “இறீம் றீம் நசி மசி” என்று லட்சம் உரு
செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகத்தியர்.
சனிக்கான உடல் கட்டு மந்திரம்..
***********************************
“போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே”
– அகத்தியர் –
பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு “ஸ்ரீம் றூம் றூம்” என்று லட்சம் உரு
செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.
ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
****************************************
“திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்”
– அகத்தியர் –
திறமான இராகு பகவானின் உடல் கட்டு
மந்திரத்தை கேளு “அரீம் ஸ்ரீம் நசி மசி”
என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால்
இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார்
அகத்தியர்.
கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..
******************************************
“சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம்
போடே”
– அகத்தியர் –
கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை
கேளு “அங் சிங் நசி மசி” என்று லட்சம் உரு
செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு
தீரும் என்கிறார் அகதியர்.
நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின்
மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல்
கட்டு மந்திரங்களை அகத்தியர்
அருளியிருக்கிறார்.
குளிகன் உடல் கட்டு மந்திரம்..
********************************
“நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா”
– அகத்தியர் –
குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு
“ஓம் ஐயும் ஐயும்” என்று லட்சம் உரு
செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும்
என்கிறார் அகத்தியர்.
அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.
********************************************
“பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங்
என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே”
– அகத்தியர் –
“வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம்
புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங்
வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம்
பம் வம்” என்று எண்ணிக்கை குறையாது
லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே
அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும்
என்கிறார்.
இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால்
உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப்
பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ
கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும்
அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது
உடல் முழுமையாக உனது
கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.
உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை
****************************************
சித்தர்களின் மந்திரங்கள் மிகவும்
நுட்பமானவை. அவர்தம் பாடல்களில்
மந்திரங்கள் மட்டுமே கூறப்
பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை
செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு
கொண்டு வருவது போன்றவைகள்
குருவினால் மட்டுமே கூறிட இயலும்.
தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை
வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.
இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும்
முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை
இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு
பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம்
மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி
பார்ப்போம்.
“தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும்
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்
திருவான வினாயகரின் சுழியை முந்திச்
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே”
– அகத்தியர் –
குருபரனாம் வினாயகரின் சுழியான “ஓம்”
என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம்
முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம்
என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும்,
சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே
அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர்,
மேலும் திருவான வினாயகரின் சுழியை
முதலில் செபித்தே தனது மந்திரங்கள்
அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று
சொல்கிறார்.
“அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு
வடக்குமுகம் இருந்துலட்சம்
உருத்தான்போடு”
– அகத்தியர் –
மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு
உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து
ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு
நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க
வேண்டும் என்கிறார்.
இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய
தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும்,
முயற்சியும் உள்ள எவரும் குருவருளை
வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன்
படுத்திடலாம்.
உடல் கட்டு மந்திரம் !!!
************************
விபூதியை கையில் வைத்துக்கொண்டு
வடக்கு முகமாய்
இருந்து கொண்டு
“ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல்
முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,
ரீங்காளி,பிரகாசகாளி,
வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி,
ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.
என்று 21 உரு செபித்து இவ்விபூதியை
தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி
என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை
ஒன்றும்
செய்ய முடியாது.
Note: எந்தவொரு மந்திரம் செபிக்கும்
முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து
விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொ
ண்டால்
அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல்
செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின்
சதியும்,மற்ற எந்த இடையூறும் நீ அந்த
விபூதியை விட்டு வெளியே வரும் வரை
உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய
வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து
கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு
வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல்
முறிந்து விடும்.
பின் குறிப்பு :
*************
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள்
அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட
நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத
நம்பிக்கைகளை விதைப்பதோ எனது
நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை,
பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும்,
விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும்
தெளிவுகள் கிட்டும்.
சித்தர்களின் திக்கு கட்டு , தேக கட்டு மந்திர ரகசியம் ???
ஓம் நமசிவாய …. ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் தான் தவம் செய்யும் இடத்திலும் , தவம் செய்யும் காலம் வரையிலும் , தங்களின் தவத்திற்கும் , உடலுக்கும் இடையூறு வராமல் இருக்க , தேகக்கட்டு , திக்கு கட்டு வசியம் செய்வர் . இந்த கட்டு மந்திரம் காப்பு செய்த பின் அவர்கள் தவம் செய்து முடிக்கும் வரை உடலுக்கும் , புற வெளியில் ( விலங்குகள் மனிதர்கள் பஞ்ச பூதங்களால் ) லும் தவத்திற்கு இடையூறு இருக்காது !. சீக்கிரம் நினைத்தவரம் கிட்டும் !!
சித்தர்கள் தவம் செய்ய அமர்ந்தவுடன் , கையில் , திருநீறு , குங்குமம் , கமண்டலநீர் , அல்லது தான் அமரும் இடத்தின் மண் அல்லது ருத்ராட்சம் , இதில் ஏதாவது ஒன்றை கையில் எடுத்து கண்களை மூடி புருவமத்தியில் கையை வைத்து ஓம் நமசிவாய என 3 முறை உச்சாடனம் செய்வர் !! பின்
உடலின் கீழ் பகுதியை நினைத்து ( மூலாதாரம் ) ஓம் நங் என்றும்
உடலின் முன்புறம் நினைத்து ஓம் யங் என்றும்
உடலின் பின்புறம் நினைத்து ஓம் வங் என்றும்
உடலின் வலப்புறம் நினைத்து ஓம் சிங் என்றும்
உடலின் இடப்புறம் நினைத்து ஓம் மங் என்றும் உச்சாடனம் செய்து கையில் உள்ள திருநீறை அந்தந்த பக்கத்தில் போடுவர்! இந்த மந்திரத்தால் தவம் செய்யும் போது சித்தர்களின் தேகத்திற்கு எந்த உபாதையும் வராது !!( இது தேக கட்டு முறை )
அடுத்து திக்கு கட்டு !!!
ஓம் நங் , ஓம் யங் , ஓம் வங் , ஓம் சிங் , ஓம் மங் , என்று மந்திரம் சொல்லி தேகக்கட்டு முடித்து பின்பு திக்கு கட்டிற்கு அதேபோல் கையில் திருநீறு எடுத்து சிவனை வணங்கி கீழ்கண்ட மந்திரம் சொல்லி திசைகளில் திருநீறு போடுவர் ,
ஓம் சண்முக நாய வசிய — தெற்கு
ஓம் பிரம்மநாய வசிய ——- வடக்கு
ஓம் தேவேந்திரநாய வசிய — கிழக்கு
ஓம் நரசிங்கநாய வசிய —– மேற்கு
ஓம் திரு நீலகண்டாயா வசிய — ஆகாயம்
ஓம் காலபைரவணாய வசிய —- பாதாளம்
ஓம் பூமிபூடாய வசிய ——- பூமி —- இப்படி மந்திரங்கள் கூறி தவம் செய்ய ஆரம்பிப்பார்கள் , இதனால் சித்தர்களின் தவத்திற்கு தேகத்திலும் , வெளியில் இருந்தும் எந்த இன்னலும் வராது இது சித்த தவமுறை ரகசியம் ஆகும் , தற்காலத்தில் இதை அருட்காப்பு என்றும் கூறுவர் ,
நீங்களும் தவம் செய்யும்போதோ அல்லது பூஜை செய்யும் போதோ இந்த மந்திரங்களை பின் பற்றினால் சித்தர்களின் ஆசி கிட்டும்.