1. நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும் அந்த நேரத்திலும்.
2.சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும் அவர்களும்
3.சிலருக்கு தீய கனவுகளின் காரணமாக இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள் அவர்களும்
4.சில குடும்பங்களில் கணவரின் தீய நடத்தையால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் .
5.பெண்கள் வேலை,படிப்பு காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும் போது தீயவர் தொல்லைக்கு ஆளாக கூடியவர்களும்.
6.வயதுக்கு வந்த பெண்ணை படிப்பதற்கு கல்லூரிக்கு(ஹாஸ்டல் ) அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழும் தகப்பனாரும்
7.சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும்
ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை
ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .
“நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! ”
இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை
நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.
அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.
==================================================
பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?‘ என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.
தொல்லை போக்கும் சரபேஸ்வரரை வழிபாடு
பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும்,வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது. சரபரை வழிபட்டால் பில்லி,சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபடுவது சிறப்பு. ராகு காலத்தில் வழிபடுவது மிக்க நல்லது.சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் அபரிமிதமான சக்தி. பக்தர்கள் முழு மனதோடு வழிபட்டு, சரண் அடைந்து சரபரின் அருளைப் பெறலாம்.
சரபரை ஒரு நிமிஷம் உள்ளன்புடன் நினைத்தாலே போதும் எதிரிகள் குலநாசம், போக மோக்ஷ பலம், முக்தி ஏற்படும். ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை மக்கள் உரவேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே சரபேஸ்வரரின் தோன்றல் நடந்ததாக கூறுவது உண்டு.திண்டுக்கல் நகரில் நாகல்நகர் சந்தைரோடு பகுதியில் உள்ள பொன்னழகு காளியம்மன் கோவிலில் சரபேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பிரதிவாரம் ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரருக்கு யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.
வீட்டில் ஸ்ரீசரபேஸ்வரர் படம் வைத்து பெண்கள் ராகு கால வேளையில் துதித்து வந்தால் வீட்டில் துர் தேவதைகள் எல்லாம் விலகிவிடும். சரபேசுவரரை மனம் உருக வழிபட்டால் செய்வினை கோளாறு, உடல்நிலை பாதிப்பு, கடன் தொல்லை, எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள், கடன் நிவர்த்தி எல்லாம் சர்வ நாசம் செய்து உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கு நன்மை தருவார்.புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் 6 கிலோ மீட்டர் மொட்டாண்ஹில் பக்கம் பிரத்தியங்கரா தேவி உக்கிரமான முறையில் கோவில் கொண்டுள்ளாள். ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும், ஸ்ரீசரபேஸ்வரர் மூர்த்தியும் சேர்ந்தருள் செய்த சந்தி நேரத்தில் பூஜை செய்வது நல்லது.
ஸ்ரீசரபேஸ்வரரை வழிபடச் செல்லுகையில் இல்லத்தி லிருந்தே செருப்பு அணியாமல் செல்வது நல்லது. ஸ்ரீசரபமூர்த்தி, ஸ்ரீபிரத்தியங்கிரதேவி, ஸ்ரீ துர்க்காதேவி, ஸ்ரீநரசிம்மமூர்த்தி போன்ற சுவாமி படங்களை வீட்டில் வைத்தும் வழிபடலாம்.ஸ்ரீசரபேஸ்வரர் சிலை வடிவமாக இருந்தால் முழு சந்தனக்காப்பும், தூணில் சரப ரூபமிருந்தால் தேங்காய் எண்ணை காப்பும் செய்தும் வழிபடவேண்டும். எதிரே ஸ்ரீநரசிம்மர் இருந்தால் முதலில் அவருக்குத்தான் நல்லெண்ணைய் காப்பும், தைலக்காப்பும் செய்ய வேண்டும்.பிரதோஷ நேரத்தில் தான் ஆதிபரம் பொருளாம் சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரக சக்தியினைத் தணித்தார். எனவே, பிரதோஷ நேரத்தின் போது ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அதி அற்புத பலன்களைப் பெற்றுத் தருகிறது.