Home ஆன்மீக செய்திகள் வில்வம், துளசி சிறப்பு

வில்வம், துளசி சிறப்பு

by Sarva Mangalam

சிவபெருமானுக்கு வில்வ மாலையே மிகவும் உகந்தது. இதை அவர் அணிவதற்கு ஒரு காரணம் உண்டு.
மனிதன் நிமிர்ந்து நிற்கக்காரணம் முதுகுத்தண்டு. வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மைஉடையது. இதனால் வில்வம் கொண்டு சிவனை வழிபடுபவர்கள் எதற்கும் அஞ்சாமல், “நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ் சோம்” என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது ஐதீகம். மேலும் வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். இது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும்.
துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். மேலும் 12 ஆதித்யர்கள் (சூரியன் போன்ற பெரிய கிரகங்களின் சக்தி), 11 ருத்திரர்கள்(சிவாம்ச சக்தி), 8 வசுக்கள் (பீஷ்மருக்கு முன்னதாக பிறந்த கங்கா புத்திரர்கள்), 2 அசுவினி தேவர்களும் (தேவலோக மருத்துவர்கள்) வாசம் செய்வதாக ஐதீகம். துளசி இலை போட்ட நீர் கங்கை நதிக்கு சமமானது என்பதால் பெருமாள் வழிபாட்டில் துளசி முக்கிய இடம் பெறுகிறது.

You may also like

Translate »