Home ஆன்மீக செய்திகள் ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

by Sarva Mangalam

தமிழ்மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்; பரதனுக்கு பூசம்; லட்சுமணனுக்கு ஆயில்யம்; சத்ருக்னனுக்கு மகம்; கிருஷ்ண னுக்கு ரோகிணி; முருகனுக்கு விசாகம். இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார் கள். “பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி மூன்று புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்து வந்தார். தீவிர சிவபக்தரான இவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்தான் உண்பார்.

ஒருநாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால், அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு இல்லாததால் வீட்டிலிருந்த கேழ்வரகில் களி செய்து சிவனடியார் வரவை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் வராத நிலையில் மனம் நொந்து போனார். அவரது பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெரு மான், ஒரு சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டுக்கு வந்தார்.

அவரைப் பார்த்து அகமகிழ்ந்த சேந்தனார் கேழ்வரகுக் களியை அவ ருக்கு அளித்தார். அந்த சிவனடியார் களியை விரும்பி உண்டதுடன், எஞ்சி யிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்குத் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோவில் கருவறையைத்  திறந்தனர். என்ன ஒரு அதிசயக் காட்சி! நடராஜப் பெருமானைச் சுற்றி களிச் சிதறல்கள்! உடனே இந்த விவரம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதை கனவில் தோன்றி ஏற்கெனவே மன்னருக்குத் தெரிவித்திருந்தார்.

சேந்தனார் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார் மன்னர். அன்று நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழா. அதற்கு சேந்தனாரும் சென்றிருந்தார்.

பெருமானைத் தேரில் அமர்த்தியபின் மன்னர் உள்பட எல்லாரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

You may also like

Translate »