_கருவில் சுமக்கும் தாயைப் போல …_
_மார்பில் சுமந்து கொள்ளும் தந்தையைப் போல …_
_பாசப்பிணைப்பில் தினம் தினம் சண்டையிடும் சகோதரன் போல …_
_அன்புக்கரம் நீட்டி அணைத்துக் கொள்ளும் தோள் கொடுக்கும் தோழனைப் போல …_
_கல்விச் சீலன் எனச் சொல்லும் அளவுக்கு என்னைப் பட்டை தீட்டிய குருவைப் போல …_
_மொத்தத்தில் என் உடலைச் சுமக்கும் உயிரைப் போல …_
_எனக்குள் இருந்து எமைச் சுற்றி சுற்றி என்னைக் காக்கின்ற பரம் பொருளே .._
_ஜோதிச் சுடரே_
_கருணைக் கடலே .._
_திருநீலகண்டனே …_
_என்னுடன் நீ இருப்பதால் தோல்விகள் கூட தோற்றுப் போய்விடும் …_
_வெற்றிகள் தானே வரும்… புகழ்கள் தேடி வரும்…_
_அப்படிக் கிடைக்கும் மாலைகளும் வெற்றிகளும் எல்லாப் புகழும் என் தலைவன் ஒருவனுக்கே… எமையாளும் ஈசனுக்கே…_
*வாழ்க நமச்சிவாயம் …*
*ஓம் நமசிவாய*
*ஓம் நமசிவாய*