Home ஆன்மீக செய்திகள் கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

by Sarva Mangalam


கடன் தொல்லையால் அவதிபடுபவரா நீங்கள் ?

கடன் தொல்லையால் அவதிப்படுவோரும், மன நிம்மதி இல்லாமல் சங்கடப்படுவோரும் வழிபடக் கூடிய தெய்வம் ஹேரம்ப கணபதி.

இவருக்கு நான்கு தலைகள் உண்டு. இவரை குளிர குளிர பால், பன்னீர், சந்தனத்தால் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி அவருக்கு உரிய ஸ்லோகத்தை குறைந்தது 16 தடவை சொன்னால் மனம் நிம்மதி பெறும், கடன்களும் இல்லை என்று சொல்லும் நிலைமைக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள். வறுமையும் அகலும்.

கடனால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் :

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம ருணம்
அதி ஸீக்ரமேவ
நிவாரய ஸ் வாஹா !

மனம் நிம்மதி இல்லாமல் சங்கடங்களால் தவிப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் :

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம சங்கடம்ச
மஹா சங்கடம்ச
நிவாரய ஸ் வாஹா !

இந்த வழிபாட்டை சங்கடஹர சதுர்த்தியில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பலன்களும் கூடிய விரைவில் கைகொடுக்கும்.

You may also like

Translate »