Home ஆன்மீக செய்திகள் ஆயுஷ் ஹோமம்

ஆயுஷ் ஹோமம்

by Sarva Mangalam


ஆயுள் என்றால் இந்த உயிரானது இந்த உடலில் இருக்கும் காலம். அதாவது நாம் இந்த உலகில் வாழும் காலம்.

இந்த “ஆயுஸ் ” என்ற உயிரை ஒரு தேவதையாக (தெய்வமாக) வேதம் சொல்கிறது.
இந்த ஆயுள் தேவதையை நாம் வழிபட்டு வந்தால் நமது ஆயுளானது நீடித்து நிலைத்து இருக்கும் என்பது வேதம் சொல்லும் செய்தி.
எனவே தான் ஒரு குழந்தை பிறந்து ஒரு வயது முடிந்தவுடன் ” அப்த பூர்த்தி ” என்ற ஆண்டு நிறைவின் போது குழந்தைக்கு “ஆயுஷ் ஹோமம்” செய்து அந்த குழந்தையின் ஆயுளானது நீண்ட காலம் இருக்க வேண்டி ஒவ்வொறு வயது முடியும் போதும் ஆயுஷ் ஹோமம் செய்ய வேண்டும் என வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அது ஏன்??????

சிறுநீர் கழித்தவர்கள் உடனே தண்ணீர் குடிப்பார்கள். அதாவது உடலிலிருந்து வெளியேறிய நீர் சக்தியை மீண்டும் உடலுக்கு ஈடுகட்ட எப்படி தண்ணீர் குடிக்கிறோமோ அது போல

நமக்கு ஒரு வயது முடிந்து விட்டால் நாம் இந்த உலகில் வாழும் காலத்தில் ஒரு வருடம் குறைந்து விட்டது என்று தானே பொருள். அப்படி இழந்த ஒரு வருடத்தை மீண்டும் இந்த உடலுக்கு மீட்டுத்தர அந்த ஆயுள் தேவதையை வேண்டி ஒவ்வொரு வயது முடியும் போதும் “ஆயுஷ் ஹோமம்” செய்ய வேண்டும் என நமது நலனை உத்தேசித்து வேதத்தை வகுத்த ரிஷிகள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள் என்றால் அது மிகை அல்ல.

எனவே ஆயுஷ் ஹோமம் என்பது நமது ஆயுளை நீட்டிக்க வேண்டி வருடா வருடம் செய்யப்படும் ஹோமம். அதாவது பெயர் வைத்தல், திருமணம் செய்தல்…. போன்று வேதத்தில் சொல்லப்பட்ட நம் கடமைகளில் ஒன்று.

ம்ருத்யுஞ்ஜய ஹோமம் என்பது திடீர் என நமக்கு நமது உயிருக்கு ஏதேனும் ஆபத்து வரும் சமயத்தில் நமது உயிரை காத்துக் கொள்ள செய்யப்படும் ஹோமம் ம்ருத்யுஞ்ஜய ஹோமம்.

You may also like

Translate »