Home சிவமந்திரம் ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள்

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள்

by Sarva Mangalam

1.மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.

2. ஸ்ரீசூக்த மந்திரம் – தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் !
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :
மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் – ப்லும் – க்லீம் பீஜம்
சக்தி : கீலகம்
ஆம் – ஹ்ரீம் – க்ரோம்
ஐம் – ஸ்ரீம் – ஹ்ரீம்
ஆம் – ஹ்ரீம் – க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.

மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள் :

சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.

குறிப்பு :

முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.

3. அஷ்டலட்சுமி மஹா மந்திரம்

முதலில் மஹாலட்சுமியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம் செய்யவும்.

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே விநியோக:

தியானம்

அருண கமல ஸமீஸ்தா – முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.

ஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
மஹாலக்ஷ்ம்யை நம:

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை
கமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்
ப்ரஸுத்யை ஸ்வாஹா

இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.

4. சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:
ஜகத் ப்ரஸுத்யை ஸெளபாக்ய
லக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி
ஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா
என்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

5. அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

6. கமலவாசினி மந்த்ரம்

நம : கமல வாசின்யை ஸ்வாஹா

இது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் – 10 லக்ஷம் ஜபம் – த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.

அல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.

7. பொன் – மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்

லக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.

ஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

என்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.

8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்
மேதேஹி ஸ்வாஹா

அசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம், கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.

9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட

சித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.

மந்த்ரம் :

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவீர் ஜுஷதாம்

வெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப் பதவி கிட்டும்

You may also like

Translate »