Home பரிகாரங்கள் வேலையின்மைக்கு தீர்வு தரும் பரிகாரம்

வேலையின்மைக்கு தீர்வு தரும் பரிகாரம்

by Sarva Mangalam

ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக்கொண்டு சூரிய வெளிச்சம் தன மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே “ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ” என்று 108 தடவை ஜெபிக்கவும்.

ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம். அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும். (அரச மர வேரில் ஊற்றினால் மிகவும் சிறப்பு).

தொடர்ந்து அல்லது விட்டு விட்டு 10 ஞாயிற்றுக்கிழமைகள் செய்து வர வேலையின்மை, நிர்வாகத்திறமை இன்மை நீங்கும். அரசு தேர்வு எழுதுபவர்கள் இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

You may also like

Translate »