Home மாந்திரீகம் ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?

ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?

by Sarva Mangalam

ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து இறந்த முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் அதனால் ஏற்படும் பிரேத சாபம் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும்.

பரிகாரங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செய்ய வேண்டும். பரிகாரங்களில் முதன்மையானது பித்ரு தோஷ நிவர்த்தி. ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து இறந்த முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் அதனால் ஏற்படும் பிரேத சாபம் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும்.

இறந்தது கன்னியா, சுமங்கலியா, பிரம்மச்சாரியா மற்றும் துர்மரணமா என தெரிந்து அதற்கு ஏற்ப தில ஹோமம் செய்ய வேண்டும். தர்பணம் மட்டும் செய்தால் போதாது. மாந்தி என்கிற கிரஹம் ஜாதகத்தில் உள்ள நிலையை வைத்து பித்ரு சாபம் மற்றும் செய்வனை கோளாறு உள்ளதா என்று கண்டுபிடித்து தக்க பரிஹாரம் செய்ய வேண்டும்.

திருமணத்தடைக்கு முதன்மையான காரணம் பித்ரு தோஷம். இரண்டாவதாக களத்திரகாரகன் என்னும் சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் கிருத்திகை, திருவாதிரை, கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்களில் நின்றால் திருமணம் தாமதப்படும். செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம் என்பதை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்க்காமல் வதூ, வரன் இவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய வேண்டும்.

செவ்வாய் தோஷத்தைப் பற்றிய சரியான அடிப்படை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

திருமண மண்டபம் கிடைக்கும் நாளில் பெண்ணின் மாதவிடாய் நாளாக இருப்பின் அதைத் தவிர்க்க மாத்திரைகளை உண்ணக் கூடாது. திருமணம் வியாழக்கிழமையில் நிகழ்த்தக் கூடாது. வெள்ளிக்கிழமை, ஞாயிறு கிழமைகளில் திருமணம் நடந்தால் சாந்திமுகூர்த்தம் வேறு ஒரு நாளில் நடத்தவேண்டும்.

சுக்கிரன் என்கின்ற கிரஹம் சந்திரன், ராகு, சனி ஆகிய கிரஹங்களின் நட்சத்திரத்தில் ஒரு ஜாதகத்திலிருந்தால் பணம் எவ்வளவு சம்பாதித்தாலும் செல்வர் தங்காது. இதற்கு பரிகாரமாக கன்னியாகுமரி அருகே உள்ள விஜயாபதி என்கிற கிராமத்திலுள்ள மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நவாபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும்.

You may also like

Translate »