Home மாந்திரீகம் ஜோதிடம் என்பது எது

ஜோதிடம் என்பது எது

by Sarva Mangalam

நிகழப்போகிறது என்பதை குறி சொல்வதல்ல. ஒருவரின் வாழ்க்கையில் அந்தந்தக் காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருடைய சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கு. இந்தக் கணிப்பைக் கொண்டு, சில இடர்களை வருமுன் காத்துக்கொள்ளலாமே தவிர, கிரக நிலைகளை மாற்றி அமைக்க முடியாது. நீண்ட தொலைவு ரயில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் இடர்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் பயணத்தைத் தொடர்வதைப் போல, நம் வாழ்க்கையில் சில இடர்களை சமயோசிதமாக ஜோதிட உதவியோடு கடந்துவிடலாம். கிரகம், நட்சத்திரம், ராசி ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது ஆயிரக்கணக்கான பலன்கள் எப்படி விளைகின்றன; அவற்றைக் கணித்து ஒருவர் வாழ்க்கையில் எப்படித் துல்லியமாகப் பலன்களைச் சொல்லலாம், தொலைக்காட்சியில் சொல்லும் வார பலன்கள் ஏன் சிலருக்குப் பொருத்தமாகவும் வேறு சிலருக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கின்றன; ஆகவே, எதையெல்லாம் தவிர்க்காமல் கணக்கில் எடுத்துக்கொண்டு துல்லியமாக பலன்களைக் கணிக்கலாம்

You may also like

Translate »