Home ஆன்மீக செய்திகள் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்?

செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்?

by Sarva Mangalam

 

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர் நினைப்பது உண்டு. ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும். இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்த ஒரு செலவும் ஆகாது. ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இதயம் போன்ற வடிவில் வளரக் கூடியது மணி பிளான்ட்.

சரியான திசை முக்கியம் மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

விநாயகரின் திசை தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது. இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.

செல்வம் பெருக காரணங்கள் தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வைக்கக் கூடாத திசை எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.

குருவின் ஆதிக்கம் வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது. சுக்ரனும், குருவும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். இந்த திசையில் வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வடகிழக்கில் வைக்க வேண்டிய செடி துளசி செடியை வடகிழக்கு திசையில் வைப்பது தான் சரியானது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

செல்வம் பெருகும் மணி பிளான்ட் மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிடுங்கள், இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.

You might also like:

You may also like

Translate »