Home ஆன்மீக செய்திகள் கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு

கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு

by Sarva Mangalam

 

கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!

கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.

கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு
லட்சுமி நரசிம்மர்
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.

இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது. லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.

அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு, தண்ணீர், வெல்லம் சேர்ந்த கலவை) பிரசாதமாக வைக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பூஜையைச் செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழி உண்டாகும். தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுதல் நீங்கவும் இது சிறந்த பரிகாரம்.

You may also like

Translate »