Home ஆன்மீக செய்திகள் ஆரோக்கியமாக சமையலில் ஈடுபடுங்கள் (வாஸ்து டிப்ஸ் )

ஆரோக்கியமாக சமையலில் ஈடுபடுங்கள் (வாஸ்து டிப்ஸ் )

by Sarva Mangalam

 

ஆரோக்கியமாக சமையலில் ஈடுபடுங்கள் (வாஸ்து டிப்ஸ் )

கிழக்கு நோக்கிய வீட்டில் மெயின்ஹால் வடகிழக்கு அறையில் அமைக்கக்கூடியதை பார்த்த நாம், இப்போது மற்ற அறைகள் எங்கே இருந்தால் முழு பலன்களையும் அடைய முடியும் என பார்ப்போம். சமையலறை, இதை ஒட்டிய பொருள் வைப்பு அறை (Store Room), சாப்பிடும் அறை, படுக்கை அறை, விருந்தினர் அறை, குழந்தைகள் அறை, படிக்கும் அறை, பூஜை அறை, நூலகம், கழிவறை, உடற்பயிற்சி அறை(நிஹ்னீ), ஹோம் தியேட்டர், பணியாளர் அறை, மாடிப்படி, வீட்டு விலங்குகள் அறை, மின்சாதனப் பெட்டிக்கான இடம் ஆகியவற்றை அமைக்கும் முறையை இனி விரிவாக காண்போம்.
சமையலறை
சமையலறையை பழங்காலங்களில் விறகு கொண்டே பயன்படுத்தி வந்தனர். பின்னாளில் மண்ணெண்ணெய், கேஸ், மின் அடுப்பு போன்றவற்றை பயன்படுத்தும் முறைக்கு வந்துள்ளோம்.
எப்போதும் கதகதப்பாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து அங்கே அடுப்பு இருக்குமானால் சமையல் விரைவில் முடியும் என முன்னோர்கள் எண்ணினர். அப்படிப்பட்ட இடம் தென்
கிழக்கு/ஆக்நேயம் என பெயரிட்டு, இங்கேயே அடுப்பை அமைத்தனர். எனவே விரைவில் சமையலை செய்து முடிக்க அது உதவியாக இருந்தது. எனவே, இன்றளவிலும் அக்னிமூலை எனப்படும் தென்கிழக்கிலேயே சமையலறை அமைக்கும் முறையை கடைப்பிடிக்கிறோம். மேலும் கதகதப்பாக உள்ள அறையில் கிருமிகள் பரவாது என்பதால் உணவும் உணவுப் பொருட்களும் பாதுகாப்பாக இருக்கும் என்ற விஞ்ஞான அடிப்படையிலும் இருப்பது நோக்கதக்கதாகும்.
சமையல் அறையில் சமையல் செய்யும் மேடையை இரண்டு அல்லது இரண்டேகால் அடி அகலத்தில் வைத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட மேடை வடக்கு சுவரை தொடாமல் 6 அங்குலம் இடைவெளிவிட்டு அமைக்க வேண்டும். ஏனெனில் ஈசானியத்தில் மேடை அமைக்கும்போது பாரம் அதிகமாகி பல சிரமங்களைத் எதிர்கொள்ள
வேண்டிவரும்.
கிழக்கு போலவே, இந்த மேடையை தெற்கிலும், மேற்கிலும் அமைத்துக்கொள்ளலாம்.
சிங்க் எனப்படும் பாத்திரங்கள் கழுவும் பகுதியை தெற்கு சுவரில் தென்மேற்கு பகுதியில் (மூலை அல்ல) அமைக்க வேண்டும். இதற்கான காரணங்கள் என்னவென்றால் சிங்க் தொட்டியிலேயே பாத்திரங்களைப் போட்டு பிறகு கழுவும்போது கிருமிகள் அருகிலுள்ள உணவுப்பொருட்களை தாக்கக்கூடும். எனவே, வடகிழக்கில் சிங்க் தொட்டியை அமைக்காமல் தெற்கு பகுதியிலேயே அமைப்பதே பாதுகாப்பானதாக இருக்கும்.
மேலும் தெற்கு திசையில் சிங்க் அமைக்கும் போது சமையல் பாத்திரங்களை கழுவி வைப்பதும் அதை தென்மேற்கில் அடுக்கி வைப்பதும் சரியான நடைமுறையாகவும்; வசதியாகவும் இருக்கும்.
சிலர் வடகிழக்கில் ‘தண்ணீர்’ வேண்டும் என்ற கருத்தில் அமைப்பார்கள். இது தவறு. தண்ணீர் என்பது ஈசான்யத்தில் நிலத்திற்கு கீழே இருப்பது தான் நல்லதே தவிர, சமையலறைக்குள் இந்த சாஸ்திரத்தைப் பொருத்திப் பார்ப்பது சரியல்ல.
மேலும் சிலர் சமையலறையில் கிழக்கு சுவரில் உயரத்தில் பொருட்களை வைக்கும் அமைப்பை ஏற்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு, வாஸ்து முறைப்படி கிழக்கு பாரம் மட்டுமின்றி இங்கிருந்து பொருட்களை எடுக்க முயலும்போது, மேடையில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது துணிமணிகளில் தீ பட்டு விபத்து ஏற்பட ஏதுவாகும்.
மேலும் இவற்றை மிகவும் எதிர் காற்றோட்ட அமைப்பு உடையதாக படத்தில் உள்ளபடி கிழக்கு ஈசான்யத்திலும், தெற்கு மையப்பகுதியிலும் இருக்கும்போது வடகிழக்கு, தென்மேற்கு காற்று பருவகாலங்களில் நல்ல காற்றோட்டமாக இருக்கும். இவ்வாறு 2 ஜன்னல் அமைப்பு இல்லை எனில் உள்ளே வந்த காற்று சமையலறை சூடான காற்றை வெளியேற்ற முடியாமல் போக, அதனால் சமையலறையில் வேலை செய்பவர்களின் ஆரோக்கியம் கெட நிறைய வாய்ப்பிருக்கிறது.
இதேபோல் சமையலறையில் எக்காரணம் கொண்டும் மின்சார ஸ்விட்சுகளை அமைக்காமல் சமையலறைக்கு உள்ளே செல்லும்போது வாசலுக்கு அருகே உள்ள சுவரின் வெளிப்புறத்தில் அமைத்தால் மின்கசிவு ஏற்பட்டு கேஸில் தீப்பற்றக்கூடிய விபத்துகள் ஏற்படாமல் தடுக்க இயலும்.
மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை தெற்கு/மேற்கிலும் குடிநீர் சுத்திகரிப்புக் கருவியை வடக்கு/கிழக்கு சுவரிலும் அமைத்துக்கொள்வதால் வசதியும் கூடும்; வாஸ்து சாஸ்திரமும் முறையாகப் பின்பற்றப்படும்.
கிழக்கு சுவரில் மின் விளக்கைப் பொருத்தாமல் விதானம்/வடக்கு/தெற்கு சுவர்களில் அமைக்க சிறப்பான பலனை எதிர்கொள்ள முடியும். ஏனெனில் மழை, குளிர் காலங்களில் பூச்சிகள் மின் விளக்கால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி வந்து, சமையல் பாத்திரங்களில் விழுந்து சாப்பாட்டை கெடுக்க வாய்ப்பிருக்கிறது. எனவே கிழக்கு சுவரில் மின் விளக்கு அமைப்பை ஏற்படுத்தாமல் இருப்பது சிறந்தது.
புகைபோக்கி விசிறியை (எக்ஸாஸ்ட் ஃபேன்) கண்டிப்பாக தெற்கு சுவரில் மட்டுமே அமைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வீடுகளில் வாஸ்து விஞ்ஞானத்தை அறியாமல் கிழக்கு சுவரில் அமைக்கின்றனர். பூமியானது மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது அழுத்தம் காரணமாக கிழக்கு புகைபோக்கி விசிறி தானாகவே எதிர் திசையில் சுழலும். எனவே, நாம் இதை உபயோகிக்கும் போது பாதிபலன் மட்டுமே கிடைப்பதால் புகை, சூடுகாற்று வெளியே செல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தெற்கு சுவரில் மட்டுமே புகைபோக்கி மின்விசிறியை அமைக்க வேண்டும்.
கேஸ் சிலிண்டரை கிழக்கு சுவருக்கு வெளியே வைத்துக்கொண்டால் மிகச் சிறப்பான பலன்கள் காணமுடியும். சிலிண்டரை மாற்றும்போது பாதுகாப்பாகவும் இருக்கும்.
சமையலறையில் இரவில் மின் விளக்கு (குறைந்த வாட்ஸ்) எரிந்து கொண்டேயிருந்தால் கரப்பான் பூச்சி, ஏனைய பூச்சிகள் சமையலறைக்குள் வரத் தயங்கும்.
கிடங்கை (ஸ்டோர் ரூம்) சமையலறையின் மேற்கு/வடக்கு/தெற்குபுறம் அமைத்து, ஸ்டோர் ரூமில் தெற்கு-மேற்கு சுவரில் ஸ்லாப் அடுக்குகள் அமைத்துக் கொள்ளலாம்.

You may also like

Translate »