வீட்டிலிருந்து புறப்படுவதற்குமுன் எந்தவித தொந்தரவும், விபத்தும் ஏற்படாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்றால் இறைவன் அருள்தேவை. அதற்கு கீழ்கண்ட மந்திரத்தை வெளியே புறப்பட்டுச் செல்லும்போது அனுமனை மனதில் நினைத்து வணங்கி சொல்ல வேண்டிய ஸ்லோகம் –
ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமபூஜித
பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.
பொருள் : அவமானத்தை அடையாதவரும், ராமரால் கொண்டாடப்பட்டவருமாகிய அனுமனே! உமக்கு நமஸ்காரம். நான் இப்போது பயணமாகிறேன். எனக்கு எப்போதும் காரியசித்தியாக வேண்டும். நல்லபடியாக திரும்பி வரவேண்டும். மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த அனுமன் அளப்பரிய சக்தி கொண்டவர். இவரை, கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும். மேலும், சனி பகவானின் தாக்கமும் குறையும்.ஸ்ரீராமஜெயம்