பசி

by Sarva Mangalam

பிச்சைக்காரனைக் கண்டாலே ஒதுங்கிப் போகிறோம்…?
அவன் புற அழகைப் பார்த்ததும்.
ஆனால், அவன் நம்மை சாமி சாமி என்றே அழைத்து அவனுள் உள்ளூரும் பசியைப் போக்க கூப்பிடுகிறான்,..
நீயும் கடவுளைச் சாமி சாமி என்றே அழைக்கின்றாய்,
எதற்காக உன்னுள் ஊறிய கஷ்டங்களைப் போக்குவதற்காக,..
அப்போது நீ கடவுளையே நேரில் கண்டாலும்,
கடவுளவன் ஒதுங்கித் தான் போவான்…
ஏனெனில் உன் புறம் அழகாயிருந்து என்ன பயன், உன் அகம் சுத்தமில்லையே,..
ஏனெனில் யாவர்க்கும் ஒரே பசியான வாழ்வு தானே!
உமக்கு பணப்பசி, அவனுக்கோ
வயிற்றுப் பசி, அவ்வப்போது சிந்தையில் கொள்க…
நமக்கு வயிற்றுப் பசி கிடையாது, பணப்பசி தான். ஆகவே அவன் கேட்பது வயிற்றுப் பசிக்காகத் தானே,…
அதை அவனுக்கு நீயளித்தால்,
உம் பசியைப் போக்க வல்ல இறைவனவன் காத்திருப்பான்…
அச்சந்தர்ப்பத்தை உமக்கு அருளாய் வழங்குவான்….
எனவே புற அழகை கண்டு மனம் சுளிக்காமல், உன் அழகான அக அழகினைக் கொண்டு அதைப் போக்குவாயாக…
எல்லோரும் மனிதர்களே! எல்லோரும் நல்லவர்களே அவரவர் சந்தர்ப்பம் அவர் அவரை ஆட்டிப் படைக்கின்றது அவ்வளவே…!!!
#ஓம்_நமசிவாயம்_ஓம்

You may also like

Translate »